செய்யுள் விகாரம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

விகாரம் என்பது இயல்பு மாற்றம்.

செய்யுளில் எதுகை,மோனைகளுக்காகச் சில சொற்கன் தன் இயல்பு மாற்றத்தோடு கையாளப்படும். ஓசை ஒத்திசைவுக்காக இவை இவ்வாறு வருகின்றன. [1] [2]

  • வலித்தல் விகாரம்
குறுந்தாட் பூதம் (குறுந்தாள் என்பதில் உள்ள [ள்] வல்லின [ட்] ஆயிற்று)
  • மெலித்தல் விகாரம்
தண்டையின் இனக்கிளி கடிவோள் (தட்டை என்பதில் உள்ள [ட்] தண்டை என வரும்போது [ண்] ஆகி மெலிந்தது)
  • நீட்டல் விகாரம்
போத்தறார் புல்லறிவினார் (பொத்தறார் என்னும் சொல் போத்தறார் என நீண்டது) பொத்து > போத்து
  • குறுக்கல் விகாரம்
நன்றென்றேன் தியேன் (தீயேன் என்பது தியேன் எனக் குறுகி வந்தது)
  • விரித்தல் விகாரம்
நெல் விளையும்மே (விளையுமே என்பது விளையும்மே என விரிந்தது)
  • தொகுத்தல் விகாரம்
நீ நாடுகென (நீ நாடுக என்பதன் இறுதியில் உள்ள [அ] தொக்குநின்றது அதாவது மறைந்து நின்றது)
Remove ads

அடிக்குறிப்பு

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads