செராஸ்–காஜாங் விரைவுச்சாலை
கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் விரைவுச்சாலை From Wikipedia, the free encyclopedia
Remove ads
செராஸ்–காஜாங் விரைவுச்சாலை (மலாய்; Lebuhraya Cheras–Kajang; ஆங்கிலம்: Cheras–Kajang Expressway; சீனம்: 蕉赖—加影大道 என்பது தீபகற்ப மலேசியா கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் 11.5 கிலோமீட்டர் (7.1 மைல்) கட்டுப்படுத்தப்பட்ட விரைவுச்சாலையாகும். இந்த விரைவுச்சாலை கோலாலம்பூர்–சிலாங்கூர் எல்லையில் உள்ள செராஸ் புறநகர்ப் பகுதிக்கும் சிலாங்கூரில் உள்ள காஜாங் நகருக்கும் இடையில் செல்கிறது.
இந்த விரைவுச்சாலை, காஜாங் மற்றும் செராஸ் நகரங்களுக்கு இடையிலான ஒரு பெரிய சாலை விரிவாக்கத்தின் ஒரு பகுதியாகும். விரைவுச்சாலையின் கட்டுமானம் 1998-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் முடிவடைந்தது. RM 275 மில்லியன் செலவில் கட்டப்பட்ட இந்த விரைவுச்சாலை 15 சனவரி 1999 அன்று செயல்படத் தொடங்கியது.[1]
Remove ads
பொது
மலேசியாவின் முதல் எட்டு வழி இரட்டைச் சாலைகளில் செராஸ்-காஜாங் விரைவுச்சாலை ஒன்றாகும். இந்த விரைவுச் சாலையில் ஓர் ஓய்வுப் பகுதி; ஒரு சேவைப் பகுதி; மற்றும் ஒன்பது சந்திப்புப் பகுதிகள் உள்ளன. இணைக்கப்பட்ட பகுதிகளின் போக்குவரத்தில், இந்த விரைவுச் சாலை கணிசமான அளவிற்குப் போக்குவரத்தைப் பெற்றுள்ளது.[2]
சுங்கக் கட்டணங்கள்
பத்து 9 மற்றும் பத்து 11 சுங்கச் சாவடிகளில், விரைவான பரிவர்த்தனையை எளிதாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, சனவரி 13, 2016 முதல், செராஸ்-காஜாங் விரைவுச் சாலையில் உள்ள இரண்டு சுங்கச் சாவடிகளின் அனைத்து பரிவர்த்தனைகளும் தொட்டு செல் அட்டைகள் அல்லது திறன் அட்டைகள் (SmartTAG) எனும் மின்னணு முறையில் நடத்தப்படுகின்றன.[1]
(அக்டோபர் 15, 2015 முதல்)
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads