செல்சியசு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பாகை செல்சியசு (°C) வெப்பநிலையை அளக்கும் ஓர் அலகாகும். 1742 ஆம் ஆண்டு செல்சியசு முறைக்கு ஒத்த முறையை முன்மொழிந்த, சுவீடன் வானியலாளர் ஆண்டர்சு செல்சியசு ஐ (1701-1744), (Anders Celsius) நினைவுகூரும் வகையில் இப்பெயர் இடப்பட்டுள்ளது.[1] 1750 தொடக்கத்தில் "செண்டிகிரேட்" அல்லது சென்றிகிரேட் (நூற்றன் பாகை என்னும் பொருளது) என்ற பெயர் பாவனையிலிருந்தது, 1948 ஆம் ஆண்டு இது இவ்வலகு செல்சியசு என மாற்றம் செய்யப்பட்டது.
1954 ஆம் ஆண்டு வரை இருந்த வரையறையின் படி, கடல் மட்டத்தில் உள்ள, தரம் சீர்செய்யப்பட்ட, சூழ் அழுத்த (101.325 கிலோ பாசுக்கல்) நிலையில் நீரானது பனியாய் உறையும் வெப்பநிலையில் இருந்து நீரின் கொதிநிலை வரை உள்ள வெப்ப நிலை வேறுபாட்டை 100 சம பாகைகளாகக் கொண்டது இந்த செல்சியசு வெப்பநிலை அளவீடு. இன்றும் இந்த அளவீடு துல்லியமானதே, எனினும், தற்காலத்தில் தரம் செய்யப்பட்ட செல்சியசு அளவீட்டின் படி நீரின் முந்நிலைக் கூடற்புள்ளி அல்லது முக்கூடற் புள்ளி (நீரானது ஒரே சமையத்தில் திண்ம, நீர்ம, வளிமம் ஆகிய முன்னிலைகளிலும் இணைந்திருக்கும் நிலை) என்பது 0.01 °C என்று கொள்ளப்படுகின்றது.
Remove ads
வெப்பநிலை அலகுகளுக்கிடையேயான தொடர்பு அட்டவணை








மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads