செல்ட்டிக் திடல்

From Wikipedia, the free encyclopedia

செல்ட்டிக் திடல்map
Remove ads

55°50′58.96″N 4°12′20.12″W

விரைவான உண்மைகள் செல்ட்டிக் திடல், பார்க் எட் பாரடைசு ...

செல்ட்டிக் திடல் (Celtic Park, செல்டிக் பூங்கா) இசுக்கொட்லாந்து, கிளாஸ்கோ நகரில் பார்க் எட் பகுதியில் உள்ள காற்பந்தாட்ட விளையாட்டரங்கமாகும். இது செல்டிக் காற்பந்துக் கழகத்தின் தாயக மைதானமாகும். அனைவரும் அமரக்கூடிய இவ்வரங்கத்தின் கொள்ளளவு 60,355 பேராகும்.[4] செல்டிக் விளையாட்டரங்கம் இசுக்கொட்லாந்திலுள்ள விளையாட்டரங்குகளிலேயே மிகப்பெரியதாகவும் ஐக்கிய இராச்சியத்தில் மிகப்பெரிய விளையாட்டரங்குகளில் ஏழாவதாகவும் விளங்குகிறது. செல்டிக் இரசிகர்களால் பொதுவாக பார்க்கெட்[5] என்றோ பாரடைசு[6][7] என்றோ குறிப்பிடப்படுகிறது.

1887இல் நிறுவப்பட்ட செல்ட்டிக் காற்பந்துக் கழகம் 1988இல் தனக்கான விளையாட்டரங்கை பார்கெட் பகுதியில் அமைத்தது. 1892இல் வாடகைக் கட்டணம் உயர்ந்தமையால் கழகம் மாற்றிடத்திற்கு இடம் பெயர்ந்தது. புதிய இடத்தில் நீள்வட்ட வடிவில் விளையாட்டரங்கை கட்டமைத்தது. இங்கு சாதனை வருகைப் பதிவாக சனவரி 1, 1938இல் 83,500 பார்வையாளர்கள் உள்ளூர் கழகங்களுக்கிடையேயான போட்டியைக் காணக் கூடினர். 1957இலிருந்து 1971 வரையான காலத்தில் கூரை வேயப்பட்டது; ஒளிவெள்ள குழல்கள் நிறுவப்பட்டன. பழைய இருக்கைப்பீடங்கள் இடிக்கப்பட்டு முற்றிலும் புதிய, அனைவரும் அமரக்கூடிய, விளையாட்டரங்கம் ஆகத்து 1998இல் கட்டி முடிக்கப்பட்டது.

2014 பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளின் துவக்கவிழா இந்த அரங்கத்தில் நிகழ்ந்தேறவுள்ளது.[8][9]

Thumb
விரிகாட்சி
Remove ads

மேற்சான்றுகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads