செல்வராசா பத்மநாதன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
செல்வராசா பத்மநாதன் அல்லது குமரன் பத்மநாதன் (கேபி) விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர். விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பள்ளி நண்பரான இவர், பிரபாகரனுடன் 30 ஆண்டுகளுக்கு மேலாக இணைந்து செயற்பட்டார். இவரை பிரபாகரன் குமரன் பத்மநாதன் என்று அழைத்தார்.
2009 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் புலிகளின் பன்னாட்டுத் தொடர்பாளராக இவர் நியமிக்கப்பட்டார். இவரே "எமது ஆயுதங்களை ஓய்வு அளிக்கிறோம்" என்று அறிக்கை விட்டவர் ஆவார்.[1] விடுதலைப் புலிகளின் தலைவர் கொல்லப்பட்டார் என்பதையும் உறுதி செய்தார்.[2]
விடுதலைப் புலிகளின் படைத்துறை வீழ்ச்சியைத் தொடர்ந்து, புலிகள் வன்முறை போராட்ட வழிமுறையைக் கைவிட்டு விட்டதாகவும், மக்களாட்சி வழியில் போராடப் போவதாகவும் அறிவித்தார்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads