சேகர் குமார் யாதவ்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சேகர் குமார் யாதவ் (Shekhar Kumar Yadav)(16 ஏப்ரல் 1964) என்பவர் இந்திய நீதிபதி ஆவார். இவர் தற்போது அலகாபாத் உயர் நீதிமன்றம் நீதிபதியாக உள்ளார். யாதவ் திசம்பர் 12, 2019 முதல் இப்பதவியில் உள்ளார்.[1] இவரது வழக்கத்திற்கு மாறான நீதித்துறை கருத்துகளால் செய்திகளில் இவரது கருத்துக்கள் விவாதப்பொருளானது.[2]
Remove ads
கல்வியும் நீதிபதி பணியும்
யாதவ் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் 1988ஆம் ஆண்டு சட்டம் படித்துப் பட்டம் பெற்றார். பின்னர் 1990ஆம் ஆண்டு அலகாபாத் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பதிவு செய்துகொண்டு பயிற்சி பெற்றார். நீதிபதியாகப் பொறுப்பேற்பதற்கு முன்பாக இந்திய இரயில்வே, பூர்வாஞ்சல் பல்கலைக்கழகம் மற்றும் இந்திய ஒன்றியம் முதலிய அமைப்புகளின் சட்ட ஆலோசகராகப் பணியாற்றினார். திசம்பர் 2019-ல் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட யாதவ், 2021 மார்ச் மாதம் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.[1]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads