சேசாசலம் மலை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சேசாசலம் மலை (Seshachalam Hills) இந்தியாவின், ஆந்திரப்பிரதேசத்தின் கிழக்கு தொடர்ச்சி மலைகளில் தெற்கில் உள்ளது.
புவியியல்
இந்தப்பகுதியானது முன்காம்ப்ரியன் காலத்தில் (3.8 பில்லியன் முதல் 540 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வரை) உருவாக்கப்பட்டுள்ளன. இந்த மலைப்பகுதிகளில் உள்ள கனிமங்களில் மணற்கல் மற்றும் சுண்ணாம்புக் கல்லுடன் ஒன்றிணைக்கப்பட்ட சேல் அடங்கும். மேற்கு மற்றும் வடமேற்கில் உள்ள ராயலசீமா மலைப்பகுதிகளிலும், வடக்கே நந்தியால் பள்ளத்தாக்கிலும் இதன் எல்லைகள் உள்ளன.
மத முக்கியத்துவம்
திருப்பதி, மலைமீது அமைந்துள்ள, இந்துக்களின் புனித யாத்திரை நகரமாகும். இந்த மலைகளில் ஏழு சிகரங்கள் உள்ளன. அதாவது அஞ்சநாத்ரி, கருடாத்ரி, நாராயணாத்ரி, நீலாத்ரி, சேஷாத்ரி, வெங்கடாத்ரி மற்றும் விருஷபாத்ரி. கடல் மட்டத்திலிருந்து சுமார் 600 மீ (2,000 அடி) உயரத்தில் உள்ளது. ஏழு சிகரங்களும் இந்து புராணங்களில் பாம்புகளின் ராஜாவான ஆதிசேடரின் ஏழு தலைகளைக் குறிக்கும் என்று கூறப்படுகிறது. ஸ்ரீவேங்கடேஸ்வர தேசிய பூங்காவும் இந்த பகுதியில் அமைந்துள்ளது. புகழ்பெற்ற இயற்கை வளைவு, திருமலை மலையின் சேஷாச்சலம் மலைகளின் ஒரு பகுதியாகும். இது நடுத்தர மற்றும் உயர் புரோட்டரோசோயிக் ஈயானுக்கு இடையிலான காலத்தைச் சேர்ந்தது.
Remove ads
பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி
2010ல் இது ஒரு உயிர்க்கோள காப்பகமாக நியமிக்கப்பட்டது. இங்கு மருந்துகள், சோப்புகள், ஆன்மீக சடங்குகளில் பயன்படுத்தப்படும் செஞ்சந்தன காடுகள் அதிக அளவில் இப்பகுதியில் உள்ளன.
காட்சிமாடம்
- திருமலை மலைகளில் மால்வாடி குண்டம் நீர்வீழ்ச்சி
- சேசாசலம் மலைகளின் அழகிய காட்சி
மேற்கோள்கள்
- என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா
- ஆந்திராவின் கோயில்கள் மற்றும் புனைவுகள் பரணிடப்பட்டது 2006-05-14 at the வந்தவழி இயந்திரம்
- சேஷாச்சலம் உயிர்க்கோள ரிசர்வ் பரணிடப்பட்டது 2019-09-11 at the வந்தவழி இயந்திரம்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads