சேச்செர்லா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சேச்செர்லா (Chejerla) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள நெல்லூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு மண்டலம் மற்றும் கிராமம் ஆகும். பழம்பெருமை வாய்ந்த தனிப்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க சென்னகேசவரின் தெய்வீக கோவில் இங்கு அமைந்திருக்கிறது. மேலும், சங்கராந்தி திருவிழா ஒவ்வோர் ஆண்டும் ஆயிரக்கணக்கான பக்தர்களால் சிறப்பாக இங்குக் கொண்டாடப்படுகிறது.
Remove ads
இருப்பிடம்
நெல்லூரிலிருந்து 55 கிலோமீட்டர் தொலைவிலும், பொதலகூரிலிருந்து 26 கிலோமீட்டர் தொலைவிலும் ஆத்மகூரிலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவிலும் சேச்செர்லா இருக்கிறது. நான்கு திசைகளிலும் நான்கு ஏரிகளைக் கொண்டு இக்கிராமம் அழகாக காட்சியளிக்கிறது.
மக்கள் தொகையியல்
இந்திய நாட்டின் 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி[1] சேச்செர்லா கிராமத்தின் மக்கள் தொகை 6172 ஆகும். இத்தொகையில் 52 சதவீதத்தினர் ஆண்கள் மற்றும் 48 சதவீதத்தினர் பெண்கள் ஆவர். சராசரியாக இக்கிராமத்தின் படிப்பறிவு 65.89% ஆகும். இது ஆந்திரப் பிரதேசத்தின் சராசரி படிப்பறிவு சதவீதமான 67.02% என்பதை விட குறைவாகும். ஆண்களின் படிப்பறிவு சதவீதம் 74% ஆகவும் பெண்களின் படிப்பறிவு சதவீதம் 57 ஆகவும் இருந்தது.
Remove ads
புவியியல் அமைப்பு
14.5167° வடக்கு 79.5167°[2] கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில் சேச்செர்லா கிராமம் பரவியுள்ளது. மேலும், கடல் மட்டத்தில் இருந்து 48 மீட்டர்கள் (160 அடி) உயரத்தில் இக்கிராமம் அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads