சேதிராயர்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

சேதிராயர் அல்லது சேதுராயர் என்பவர்கள், நடுநாட்டில் திருக்கோவிலூரைத் தலைமையிடமாக வைத்து ஆட்சி செய்த சிற்றரச வம்சம் ஆகும். ஆர்க்காட்டு கோட்‌டத்து வடமேற்குப்‌ பகுதியை ஆண்டவர்‌கள்‌. இவர்கள்‌ முதற்குலோத்துங்கன்‌ கால முதலே “சேதிராயர்‌' என்ற புதிய பட்டத்துடன்‌ கல்வெட்டுகளிற்‌ காண்கின்றனர்‌. [1]

முதற்குலோத்துங்கன்‌ காலமுதல்‌ பிற்‌ பட்ட ஒவ்வொரு சோழ அரசன்‌ காலத்துக்‌ கல்வெட்டுகளிலும்‌ தவறாது 'சேதிராயர்‌' என்று தமிக்கப்பட்டுளர்‌.

சேதிராயர் பன்னிரு திருமுறைகளில் ஒன்பதாம் திருமுறையில் அடங்கும் திருவிசைப்பா பாடிய அருளாளர்களில் ஒருவராவார். சுந்தரமூர்த்தி நாயனாரின் வளர்ப்புத் தந்தையாகிய நரசிங்க முனையார் வழியில் வந்தவர். மிகுந்த சிவபக்தியினால் சிதம்பரத்திலிருக்கும் சிவன் மீது ஒரு திருவிசைப்பா பதிகம் பாடிளருளினார். இவர் முதற்குலோத்துங்கன் (கி.பி.1070-1120) காலத்தவராகவோ, அதற்குப் பிற்பட்ட காலத்தவராகவோ இருக்கலாம் என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.

நாகூர்‌ திடலில்‌ நடப்பட்டுள்ள கி.பி. 1105ஐ சார்ந்த ஸ்ரீவல்லபன்‌ கல்வெட்டு சூரியதேவனான சேதிராயர்‌ என்பவரை பற்றி குறிப்பிடுகின்றது, சூரியதேவனான சேதிராயர்‌, கங்கைகொண்டான்‌ ராசேந்திரசோழன்‌ என்ற இரு அதிகாரிகளிடையே ஏற்பட்ட பூசலையும்‌ அதன்பின்‌ ஏற்பட்ட தீர்வையும்‌ பற்றித்‌ தெரிவிக்கும்‌ முக்கிய கல்வெட்டாகும்‌. [2]

விருதுநகர் மாவட்டம், திருச்சுழியல் ஊர், நரிக்குடி விருபாட்சிநாத சுவாமி கோயில்‌ மகாமண்டபத்தில், பிற்காலப்‌ பாண்டியர் கல்வெட்டில், பெருமாள்‌ கோயிலுக்கு இந்திரசமான நல்லூரில்‌ அளிக்கப்பட்ட நிலக்‌கொடைகள்‌ பற்றி இத்துண்டுக்‌ கல்வெட்டுகள்‌ தெரிவிக்கின்றன. இதில்‌ பல பாண்டியர்‌ அலுவலர்‌ பெயர் வருகின்றது. அதில் அரச நாராயண சேதிராயர்‌ என்பவரும் பாண்டியர்‌ அலுவலராக குறிப்பிடப்படுகிறார்.[3]

சோழ மன்னர்க்கு ஆதரவாய் இருந்த பாணனுக்கு எதிராக இருவாணர்கள் இருந்ததைத் திருவண்ணாமலைக் கல்வெட்டு ஒன்று தெரிவிக்கின்றது. பதினொடு தலைவர்கள் சேதிராயர் தலைமையில் கூடி இவ்வாணனோடு எந்தவித உறவும் வைத்துக்கொள்ளக் கூடாது என்று முடிவு செய்தார்கள் என்று அக்கல்வெட்டு தெரிவிக்கிறது. எதிராக இம்முடிவு குலோத்துங் கனின் இருபத்தேழாம் ஆட்சியாண்டில் கி.பி 1205 இல் குறிப்பிடப்படுகிறது.[4]

அண்ணாமலையார் கோவிலில் உள்ள முதலாம் சடையவர்மன் விக்கிரம பாண்டியனின் (1241-1250) இரண்டாம் ஆட்சியாண்டு கல்வெட்டு (கி.பி 1243) மூலம் சேதிராயர் நாட்டில் உள்ள சபையும், ஸ்ரீ விக்கிரம சோழ தேவர் என்னும் உயர் அதிகாரியும் இணைந்து தானத்தை வழங்கியுள்ளனர் என்பதை அறியமுடிகிறது.[5]

கள்ளர்‌ மரபினர்‌ சோழரிடம்‌ பல நூற்றாண்டுகளாகப்‌ போர்‌ வீரர்களாகவும்‌ படைத்தலைவர்களாகவும்‌ இருந்‌தனர்‌. இத்தகைய சீரிய மரபினர்‌ பல பட்டங்‌ களைப்‌ பெற்றனர்‌. அதில் 'சேதிராயர்‌' என்ற பட்டமும் ஒன்று என்று மா. இராசமாணிக்கம் தன்னுடைய நூலில் குறிப்பிடுகிறார்.[6] இளங்காடு என வழங்கும்‌ இளசை மா நகரில்‌ நான்காம் தமிழ்ச்சங்கம் தொடங்கப்படுவதற்கு இரு தசாப்தங்களுக்கு முன்னரே, ‘நற்றமிழ்ச் சங்கம்’ எனும் பெயரில் தமிழ் வளர்க்கச் சங்கம் தொடங்கப் பட்டிருக்கிறது இந்த ஊரில். ஊர்ப் பெரியவர் பம்பையா சேதுராயரின் முன்னெடுப்பில், 1881-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.[7] மேலும் தமிழ்‌ வளர்த்த்ச்‌சான்றோர்களாக, திரு.. பாலகோதண்டபாணிச்‌ சேதிராயர்‌, திரு. கோவிக்த்சாமிச்‌ சேதிராயர்‌, திரு, கணபதி சேதிராயர்‌ மற்றும் சிங்காரவேல் சேதுராயர் ஆவார்கள். [8]

தஞ்சாவூர் மாவட்டம், நேமத்தில்‌ இருந்து சுமார்‌ 1 கிலோ மீட்டர்‌ தூரத்தில்‌ ஐயர்‌ மேடு பகுதியில்‌ உள்ள இஞ்சினியர்‌ கொல்லையில்‌ மூன்று பல்லவர்கால சிலைகள்‌ காணப்படுகின்றன. இந்த சிலைகள்‌ கண்ணன்‌ சேதுராயர்‌ அவர்களால்‌ பாதுகாக்கப்‌ படுகின்றன. இந்த சிலைகள்‌ சுமார்‌ 8, 9-ஆம்‌ நூற்றாண்டை சேர்ந்ததாகும்‌. [9]

1967 ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகம், திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் ஜி. முருகையா சேதுரார் குறிப்பிடத்தக்கவர்.[10]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads