சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன் சங்ககாலச் சேர மன்னர்களில் ஒருவன்.
- இவனுக்கும் சோழன் வேல்பஃறடக்கை பெருவிறற்கிள்ளி என்னும் சோழ மன்னனுக்கும் இடையே திருப்போர்ப்புறம் என்னுமிடத்தில் போர் நடந்தது. போரில் இருவரும் தம் படைகளைப் போரிட வேண்டாம் என்று நிறுத்திவிட்டு, இவ்விருவர் மட்டுமே ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இவ்வாறு போரிடும் முறைக்கு ‘அறத்தின் மண்டுதல்’ என்று பெயர். இந்தப் போரில் இருவரும் போர்க்களத்திலேயே மாண்டனர். [1] [2]
- குடக்கோ நெடுஞ்சேரலாதன் போர்க்களத்தில் குற்றுயிரும் கொலையுயிருமாகக் கிடந்தபோது புலவர் கழாத்தலையார் அவனது கழுத்திலிருந்த மணியாரம் என்னும் அணிகலனைக் கொடையாகக் கேட்டுப் பெற்றார். [3]
Remove ads
ஒப்பிட்டுக் காணத்தக்கவர்
- குடக்கோ நெடுஞ்சேரலாதன் என்பவன் பதிற்றுப்பத்து ஆறாம் பத்து ஆடுகோட்பாட்டுச் சேரலாதனின் தந்தை. இவன் மனைவி வேளாவிக்கோமான் பதுமன் என்பவனின் மகள். [4]
- குடவர் கோமான் நெடுஞ்சேரலாதன் என்னும் விரிவுபடுத்தப்பட்ட பெயருடன் இவன் குறிப்பிடப்பட்டு, ஐந்தாம் பதிற்றுப்பத்துத் தலைவன் கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவனின் தந்தை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளான். இவன் மனைவி சோழன் மணக்கிள்ளி. [5]
- ஆராத் திருவின் சேரலாதன் என்பவன் நான்காம் பதிற்றுப்பத்துத் தலைவன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனின் தந்தை. இவன் மனைவி வேளாவிக்கோமான் பதுமன் என்பவனின் மகள். [6]
Remove ads
ஒப்புநோக்க வரலாறு (1)
- உதியஞ்சேரல் பதிற்றுப்பத்து இரண்டாம் பத்துத் தலைவனின் தந்தை. கிடைக்காமல் போன முதல் பத்தின் தலைவன் ஆகலாம். இவன் மனைவி வெளியன் வேள் மகள் (மாள்) நல்லினி. நல்லினி மக்கள் இருவர். முதல் மகன் 2-ம் பத்துத் தலைவன். இரண்டாம் மகன் 3-ம் பத்துத் தலைவன்.
- இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் இரண்டாம் பத்துத் தலைவன். இவனுக்கு இரண்டு மனைவியர். பதுமன் தேவி மூத்தவள். இவளது மக்கள் இருவர் 4-ம், 6-ம் பத்துகளின் தலைவர்கள். மற்றொரு மனைவி சோழன் மகள் மணக்கிள்ளி. இவளது மகன் 5-ம் பத்தின் தலைவனான கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன்.
Remove ads
ஒப்புநோக்க வரலாறு (2)
- பதிற்றுப்பத்து பதிகம் குறிப்பிடும் நெடுஞ்சேரலாதன் இமயம் வரை வென்றவன்.
- புறநானூறு குறிப்பிடும் நெடுஞ்சேரலாதன் சோழனோடு போரிட்டு மாண்டவன்.
- இருவரும் குடநாட்டு மன்னர்கள். [7]
அடிக்குறிப்பு
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads