சேரமான் பெருஞ்சேரலாதன்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

சேரமான் பெருஞ்சேரலாதன் சங்ககாலச் சேர அரசர்களில் ஒருவன். வெண்ணிப் போரில், கரிகால் சோழன் எய்திய அம்பு, சேரமான் பெருஞ் சேரலாதன் மார்பில் பாய்ந்து முதுகையும் கிழித்து புண்ணாக்கியதை புறப்புண்ணாகக் கருதி வடக்கிருந்து உயிர் நீத்தவர். [1].

  • இரங்கல்
இந்த இழிசெயலுக்கு வருந்திய போர்க்களம் அமைதியாகிவிட்டது. சோழனின் வெற்றிமுரசு முழங்கவில்லை. பாணர் யாழிசை கூட்டிப் பாடவில்லை. வீரர்கள் வெற்றியைக் கொண்டாடிக் கள் பருகவில்லை. ஊரிலுள்ள மக்கள் சுற்றத்தாருடன் தேறல் அருந்தவில்லை. உழவர்கள் வயல்வெளியிலும் குரவை ஓசை எழுப்பவில்லை. அந்த ஊர் மக்கள் திருவிழாவைக் கூட மறந்துவிட்டனர்.

உவா (அம்மாவாசை, பௌர்ணமி) நாள்களில் ஞாயிறு, திங்கள் ஆகிய இரண்டு சுடர்களில் ஒரு சுடர் தோன்றும்போது மற்றொரு சுடர் மறைவது போல் ஆயிற்று.[2][3]

சேர நாட்டிலிருந்து சோழ நாட்டுக்கே வந்து பேரரசன் கரிகாலனைத் தாக்கிய இந்தச் சேரன் மிகப் பெரிய அரசன் என்க.

Remove ads

அடிக்குறிப்பு

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads