சேர்வைகாரன்பட்டி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சேர்வைகாரன்பட்டி (Servaikaranpatti) என்ற தெரு (பட்டி) புதுக்கோட்டை மாவட்டத்தில், வடகாடு என்ற ஊரில் உள்ளடங்கிய ஒரு தெருவாகும். சுமார் 100 குடும்பங்களைக்கொண்ட இந்தக் குடியிருப்பு வடகாட்டின் மேற்கு பகுதியின் நுழைவாயில் உள்ள தெருவாகும். தார் ரோட்டுக்கு தெற்கிலும் பருத்திக்கொல்லை என்ற தெருவுக்கு மேற்கிலும் கூட்டான் கொல்லை என்ற தெருவுக்கு வடக்கிலும் கிழாத்தூர் என்ற சிற்றூரின் கிழக்கிலும் உள்ளடங்கிய பகுதி ஆகும். சுமார் 1.2 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட தெருவாகும். மூன்றில் ஒரு பங்கு (வேளாண்மை )விவசாயப் பகுதியுடன் கூடிய மக்கள் வசிக்கும் குடியிருப்பு.
பழங்காலந்தொட்டு பின்பற்றப்படும் விவசாய உபகரணங்கள் செப்பனிடதலான கொல்லுப்பட்டறை இங்குள்ளது.
Remove ads
இத்தெருவில் உள்ள முக்கியமான அரசாங்க அலுவலகங்கள்
- அரசு துவக்கப்பள்ளி (1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை)
- தேர்தலின்போது வாக்குச்சாவடியாக இங்குள்ள அரசு துவக்கப்பள்ளி பயன்படுத்தப்படுகிறது (192-Assembly Constituency Alangudi)
- அரசு ஆரம்ப சுகாதார நிலையம் (24Hr)
இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இரண்டு கட்டிடங்களைக் கொண்டது.முதல் கட்டிடமானது 1997ஆண்டும் இரண்டாவது கட்டிடமானது 2007ஆண்டும் கட்டப் பட்டது.இரண்டாவதாக கட்டப்பட்ட கட்டிடத்தில் பாரிய மருத்துவ வசதிகள் நிறைந்த பெண்கள் பிரசவ அறுவை சிகிச்சை அரங்கம்,32படுக்கைகள் கொண்டதும்,அனைத்து சுகாதார அத்தியாவசிய வசதிகளும் கொண்டுள்ளது.இதன் மதிப்பு சுமார் 3.2கோடி என்று அதிகார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இந்த சுகாதார நிலையம் வாயிலாக வடகாடு மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளான மாங்காடு.நெடுவாசல்,அனவயல்,கீழாத்தூர் போன்ற கிராமங்கள் பயன் பெறுகின்றன.
Remove ads
கல்வி அறிவு
வடகாடு கிராமத்திலேயே மிக மிக குறைந்த கல்வி அறிவுபெற்ற தெரு பட்டியலில் 2-ம் இடத்தை பெறுவது இத்தெருவாகும்.ஒரு சில நபர்கள் பட்டம் பெற்றுள்ளனர்.அவர்கள் இன்றைய நவீனமயமாக்களில் புகுந்துள்ள உலகத்தில் இடம்பெற்றுள்ளனர்.அவர்கள் மிகுந்த முற்போக்கு சிந்தனையுடையவர்களாக திகழ்கின்றனர்.மிக மிக குறைவான நிலங்களைக்கொண்ட குடும்பங்கள் வசிக்கும் தெரு பட்டியலில் 2-ம் இடத்தை பெறுகிறார்கள்.3-ல் ஒரு பங்கு குடும்பங்களுக்கே ஆழ்குழாய் கிணறு வசதி உள்ளது.எனவேதான் இத்தெரு மக்களால் எவ்வித முன்னேற்றத்திலும் நுழைய முடிவதில்லை.
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads