சேர அரசர் காலநிரல்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சங்ககாலச் சேர வேந்தர் ஆட்சிக் காலத்தை ஆய்வுநோக்கில் ஒப்பிட்டுப் பார்த்து அவர்கள் ஆண்ட காலத்தை நிரல் படுத்திக் காட்டிய மூன்று தொகுப்புகளை ந. சி. கந்தையா பிள்ளை தன் காலக்குறிப்பு அகராதி என்னும் நூலில் தந்துள்ளார். [1]
- கா. சுப்பிரமணிய பிள்ளை எழுதிய இலக்கிய வரலாறு என்னும் நூலில் குறிப்பிட்டுள்ள தொகுப்பு.
- கலைக்களஞ்சியத்தில் காணப்படும் குறிப்பு
- சேச அய்யர் குறிப்பு




அடிப்படை
இவை மூன்றுமே இமயவரம்பனாகிய செங்குட்டுவன் விழா எடுத்த நாளில் கண்ணகி-தெய்வம் வந்திருந்து வாழ்த்தியது போல, தான் தன் நாட்டில் இதே நாளில் விழா எடுக்கும் காலத்தில் வந்திருந்து வாழ்த்த வேண்டும் எனக் கயவாகு மன்னன் [2] கேட்டுக்கொண்டதாக வரும் செய்தியை [3] அடிப்படையாகக் கொண்டவை.
கயவாகு காலத்தை வைத்து சிலப்பதிகாரச் செங்குட்டுவன் காலம் கி.பி. 180-ல் முடிவுறுவதாகச் சுப்பிரமணிய பிள்ளை, சேச அய்யர் ஆகிய இருவரும் கொண்டுள்ளனர்.
Remove ads
வேறுபட்ட கருத்துக்கள்
பதிற்றுப்பத்து ஐந்தாம் பத்தின் பாட்டுடைத் தலைவன் கடல்பிக்கு ஓட்டிய வேல்கெழு குட்டுவன் என அதன் பதிகம் குறிப்பிடுகிறது. அவன் கடவுள் பத்தினிக்குக் கற்சிலை அமைத்ததையும் அது குறிப்பிடுகிறது. பரணர் பாடிய பதிற்றுப்பத்துப் பாடல்கள் பத்திலும் இந்தச் செய்தி இல்லை. பதிற்றுப்பத்து நூலைத் தொகுத்தவர் இச் செய்தியை இணைத்துள்ளார்.
பதிகம் தொகுத்தவர் பிற்காலத்தவர் எனக் கொண்டு இவரது கருத்தை ஏற்றுக்கொள்ளாத கா. சு. பிள்ளை கண்ணகிக்குச் சிலை அமைத்த சேரன் செங்குட்டுவன் காலம் கி.பி. 180 எனக் குறிப்பிட்டு கடல்பிறக்கு ஓட்டிய வேல்கெழு குட்டுவன் காலத்தைக் கி.மு. 180-125 எனக் காட்டுகிறார். அய்யர் இருவரையும் ஒருவர் எனக் கொண்டுள்ளார்.
இதனால் இருவேறு வகையான காலக் குறியீடுகள் தோன்றியுள்ளன.
Remove ads
கோட்பாடுகள்
மேலும் கா.சு.பிள்ளை குறிப்பில் தொண்டி-அரசர் என்னும் பாகுபாடும், அய்யர் குறிப்பில் வஞ்சி-அரசர் என்னும் பாகுபாடும் உள்ளன. இவற்றில் சில குழப்பங்கள் உள்ளன.
குழப்பங்களை நீக்கிக் காலத்தைக் கணிக்க விக்கிப்பீடியாவில் உள்ள புலவர் கால மன்னர் என்னும் தொகுப்பைப் பயன்படுத்துதல் நலம்.
மேலும் காணலாம்
மேற்கோள் குறிப்பு
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads