சேலம் சி. விஜயராகவாச்சாரியார்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சேலம் சி. விஜயராகவாச்சாரியார் (C. Vijayaraghavachariar) என்றழைக்கப்படும் சக்கரவர்த்தி விஜயராகவாச்சாரியார்[1] (18 ஜூன் 1852 - 19 ஏப்ரல் 1944) ஒரு ஒரு அரசு ஊழியர் மற்றும் சீர்திருத்தவாதியும் ஆவார். இந்திய அரசியல்வாதியும் வழக்கறிஞரும் ஆவார். 1875 இல் சென்னை மாநிலக் கல்லூரியின் ஆசிரியராகப் பணியாற்றியவர். 1882 ஆம் ஆண்டில் சேலம் மாநகர சபை உறுப்பினராக அரசியல் நுழைந்து, 1895 இல் சென்னை மாநிலக் கவுன்சில் உறுப்பினராகவும் 1913 இல் மத்திய சட்டமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்தவர் . 1882-ல் நடைபெற்ற சேலம் இனக்கலவரத்தில்[2] குற்றவாளியாகக் கருதப்பட்டு 10 ஆண்டுகள் அந்தமான் தீவுகளுக்கு நாடுகடத்தப்பட்டு சிறைத்தண்டனை பெற்றார். இதனால் தனது நகரமன்றப் பதவியினையும் இழந்தார். சிறையிலிருந்தபடியே தான் குற்றமற்றவர் என வாதாடி விடுதலையானவர். இதனால் 'சேலத்து நாயகன்'[2][3] எனவும் 'தென்னிந்தியாவின் சிங்கம்' எனவும் பாராட்டப்பட்டவர்.[4]

Remove ads
மேற்கோள்களும் குறிப்புகளும்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads