சேவயாட்டம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

செவையாட்டம் என்பது தென்னிந்தியாவில் வழங்கும் ஒரு நாட்டார் ஆடல் வடிவம் ஆகும். கம்பளத்துநாயக்கரால் ஆடப்படும் ஆட்டம் சேவையாட்டம் ஆகும்.

ஆட்டம்

தெலுங்கு அல்லது தமிழ் மொழியில் ஒருவர் பாட்டு பாடுவார், கோமாளியை போல உடை அணிந்த ஒருவர் பாடலுக்கு தகுந்தவாறு சுற்றி வந்து ஆடுவார், இது தேவராட்டம் ஆடுபவர்கள் முடிக்கும் தருவாயில் கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் தருவாயில் ஆடிமுடிப்பர். பெரும்பாலும் இராமாயணக்கதை, வீரபாண்டிய கட்டபொம்மன் கதை போன்றவற்றை பாடிக்கொண்டே ஆடுவர்.

பெருமாள் கோவில்

தென் தமிழகம் மற்றும் கொங்கு நாடு பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்களில் இவ்வாட்டம் நடைபெறும் . இது சங்ககால நூல்களில் குறிப்பிடும் பிந்தேறு குருவை எனப்படும் ஆட்டத்துக்கு சமமானதாக கருதப்படுகிறது . தேவராட்டம் ஆடும் மக்கள் கடைசியாக இந்த சேவையாட்டம் ஆடுவார்கள், இந்த ஆட்டத்தை ஆடுவதன் மூலம் தேவராட்டம் முழுமை பெறுகிறது என்பதை அறியலாம்.[1]

வத்தலக்குண்டு சென்றாயப் பெருமாள் கோயில்

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள இக்கோவிலில் நடைபெறும் சேவையாட்டம் புகழ் பெற்றது. தெலுங்கு மொழியில் அல்லது தமிழ் மொழியில் பாட்டுகளை பாடி கொண்டு ஒருவர் இருப்பார், உருமி மேளம் இசைக்கும், ராகத்தோடு பாடல் பாடும் பொழுது நையாண்டி வேஷம் போட்ட ஒருவர் சுற்றிச்சுற்றி வந்து ஆடுவார். ராஜகம்பளம் மக்கள் நடத்தும் சடங்கு , திருவிழா, திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் தவறாமல் இவ்வாட்டம் இடம்பெறும். வீரபாண்டிய கட்டபொம்மன் குரு பூஜையில் சேவையாட்டம், தேவராட்டம் முக்கிய நிகழ்வாக ஆடப்படுகிறது.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads