இராமசாமிக் கவிராயர்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

இராமசாமிக் கவிராயர் பாடியனவாக 12 பாடல்கள் அச்சேறியுள்ளன.[1] அவற்றில் பதினோரு பாடல்கள் மணலி இராமன் என்னும் காதலன் மாட்டுத் தலைவி அவனது மாலையை வாங்கிவரும்படித் தோழியரைத் தூது அனுப்புவதாக சில பாடல்களும், குருகு, அன்னம் முதலானவற்றைத் தூது விட்டதாக கூறும் பாடல்களும் அமைந்துள்ளன. கடைசியில் உள்ள பாடல் வெறிவிலக்கல் என்னும் துறை பற்றியதாக உள்ளது.[2]

அவனை வள்ளல் என்று காட்டுவதற்காக ஒரு பாடல் அவன் பெயரைக் கன்னன் என்று குறிப்பிடுகிறது.[3] இராமன் என்னும் அவன் பெயரை இலங்கையை வென்றோன் மருகன் என்று ஒரு பாடல் குறிப்பிடுகிறது.[4] குருகினைத் தூது விடும் பாடல் ஒன்று அவனை வரதுங்கராமன் என்று குறிப்பிடுகிறது.[5] அவன் மனையைத் தேராக்கித், தன் மகனைத் தேரோட்டியாக்கித், தன் பேரக்குழந்தைகளைத் தேர்க்காலாக்கித், தன்னை ஒரு அம்பாக்கிக்கொண்டு என்மேல் எய்கிறான் என்று தலைவி கூறுவதாக ஒரு பாடல் உள்ளது.[6] புதுவை முத்துகுமர தொண்டன் என்பவர் போல் கவி பாட முடியாது என்று ஒரு பாடல் குறிப்பிடுகிறது.[7] கலசைத் தெய்வசிகாமணி என இவன் பெயரை ஒரு பாடல் தெரிவிக்கிறது.[8] பருத்திப் பொதியில் இட்ட தீயைப் போலக் காமம் தன்னை வருத்துதாகக் கூறும் உவமை புதுமையாகவும் சிறப்பாகவும் உள்ளது.[9]

Remove ads

அடிக்குறிப்பு

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads