சைவ சமயக் கலைக்களஞ்சியம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

சைவசமயக் கலைக்களஞ்சியம் என்பது 2006 ஆண்டு முதல் 2012 ஆண்டு வரையிலான காலப் பகுதியில் சேக்கிழார் மனித வளமேம்பாட்டு அறக்கட்டளையினால் வெளியிடப்பட்ட சைவசமயம் பற்றிய ஒரு தமிழ்க் கலைக்களஞ்சியம் ஆகும்.[1] இந்தக் கலைக்களஞ்சியம் பத்து தொகுதிகளையும், 22 ஆயிரம் தலைமைப் பதிவுகளையும், 51 ஆயிரம் துணைப் பதிவுகளையும் கொண்டாதாகும்.[2]

இதன் தலைமைப் பதிப்பாசிரியர் பேராசிரியர் இரா. செல்வக்கணபதி ஆவார்.

தொகுதிகள்

சைவ சமயக் கலைக் களஞ்சியத்தின் தொகுதிகள் கீழ் கொடுக்கப்பட்டுள்ளன.

  1. சைவ சமயம் – தமிழகம் (புதுச்சேரி மாநிலம் உட்பட)
  2. சைவ சமயம் - உலகம் (தமிழகத்துக்கு அப்பால்)
  3. சைவத்திருமுறைகள்
  4. திருமுறைத் தலங்கள்
  5. பிற்காலத் தலங்கள்
  6. சைவ சமய அருளாளர்கள்
  7. சைவ சமய அருள் நூல்கள்
  8. சைவ சித்தாந்தம்
  9. சைவ சமய அமைப்புகள்
  10. தோரணவாயில்

ஆசிரியர்கள்

இந்தக் கலைக்களஞ்சியத்தினை 50 பேர் கொண்ட ஆலோசனைக் குழுவோடு 220 சைவத் தமிழ் அறிஞர்களைக் கொண்ட ஆசிரியர் குழுவோடு இணைந்து பேராசிரியர் இரா. செல்வக்கணபதி உருவாக்கினார்.

இவற்றையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads