சைவ ஆகமங்கள்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

சைவ ஆகமங்கள் என்பவை சிவ வழிபாட்டின் முக்கியத்துவத்தினையும், சிவாலயம் அமைக்கும் விதம், பூஜை முறைகள், அபிசேகம், அலங்கார கொள்கைகளையும் விளக்குகின்ற நூல் வகையாகும். சிவாலயங்களில் செய்யப்படும் அனைத்தும் சைவ ஆகமங்களைப் பின்பற்றியே செய்யப்படுகின்றன. சிவாச்சாரியார்களை தேர்ந்தெடுத்தல் முதற்கொண்டு அனைத்தும் இதில் அடங்குகின்றன.

மாணிக்கவாசகர் ஆகமம் ஆகி நின்று அன்னிபான் எனவும் மண்ணுமாமலை மகேந்திரமதனிற் கொள்ள ஆகமம் தோற்றுவித்தருளியும் எனப் பாடுகின்றார்.

திருமூலர்ஆகமம் பற்றிக் கூறியதை சுந்தர ஆகமம் சொல் மொழிந்தானே என்ற குறிப்பு தெளிவுபடுத்துகின்றது. திருமூலர் இறைவனால் ஆகமம் அருளப்பட்டதை தானாய் அடியார்கள் அர்ச்சிக்கும் நந்தி உருவாகி ஆகமம் ஓங்கி நின்றாளே என்றும் கூறுகின்றார்[1]. அதில் திருமூலர் சைவ ஆகமம் என்பது சிவபெருமானிடமிருந்து வந்தது என்கிறார். [2]

Remove ads

சைவ ஆகம பிரிவுகள்

சைவ ஆகமங்கள் இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன.

  1. சிவபேத ஆகமங்கள்
  2. ருத்ரபேத ஆகமங்கள்

காமிகம் முதல் வாதுளம் வரையான இருபத்தெட்டு சிவாகமங்களில், காமிகம் முதல் சுப்பிரபேதம் வரையான பத்தும் சிவபேத ஆகமங்களாகும். விஜயம் முதல் வாதுளம் வரையான பதினெட்டும் உருத்திரபேத ஆகமங்களாகும்.[3]

சிவபேத ஆகமங்கள்

  1. காமிக ஆகமம்
  2. யோகஜ ஆகமம்
  3. சிந்திய ஆகமம்
  4. காரண ஆகமம்
  5. அஜித ஆகமம்
  6. தீப்த ஆகமம்
  7. சூட்சும ஆகமம்
  8. சகஸ்ர ஆகமம்
  9. அஞ்சுமான் ஆகமம்
  10. சுப்ரபேத ஆகமம்

ருத்திரபேத ஆகமங்கள்

  1. விஜய ஆகமம்
  2. நிஸ்வாச ஆகமம்
  3. சுயம்பூத ஆகமம்
  4. ஆக்னேய ஆகமம்
  5. வீர ஆகமம்
  6. இரௌரவ ஆகமம்
  7. மகுட ஆகமம்
  8. விமல ஆகமம்
  9. சந்திரஞான ஆகமம்
  10. முகவிம்ப ஆகமம்
  11. புரோற்கீத ஆகமம்
  12. லலித ஆகமம்
  13. சித்த ஆகமம்
  14. சந்தான ஆகமம்
  15. சர்வோத்த ஆகமம்
  16. பரமேசுவர ஆகமம்
  17. கிரண ஆகமம்
  18. வாதுள ஆகமம்

காமிக ஆகமமானது, சிவ - உருத்திர ஆகமங்களையும், அவற்றின் எண்ணிக்கையையும், உபதேசிக்கப்பட்டோரையும் வருமாறு கூறுகின்றது. (1:30-) [4]

மேலதிகத் தகவல்கள் சிவபேதம்/உருத்திரபேதம், ஆகமம் ...
Remove ads

தந்திர ஆகமங்கள் (உப ஆகமங்கள்)

மேலுள்ள பட்டியலில் இன்னின்ன சிவாகமங்களுக்கு இன்னின்ன உபாகமங்கள் என்று வகை பிரிக்கப்படுகின்றது. இந்த உபாகமங்களின் எண்ணிக்கை 207 ஆகும்.


இதனையும் காண்க

ஆதாரங்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads