சொதோம் கொமோரா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அதியாகமத்தின் படி, சொதோம் (סְדוֹם, எபிரேய மொழி Sədom, டைபீரிய எபிரேய மொழி வழக்கு Səḏôm) கொமோரா (עֲמוֹרָה, எபிரேய மொழி ʿAmora, டைபீரிய மொழி Ġəmôrāh, ʿĂmôrāh) என்பன அந்நகரவாசிகளின் பாவங்களுக்காக கடவுளால் அழிக்கப்பட்ட இரண்டு நகரங்களாகும். எபிரேய மொழியில் சொதோம் என்பது "எரிக்கப்பட்ட" எனவும் கொமோரா என்பது "அழிக்கப்பட்ட மேடு" எனவும் பொருள் படும். இதன் மூலம் இவை இந்நகரங்களின் அழிவுக்குப் பிறகு இவற்றுக்கு வழங்கப்பட்டப் பெயர்களாக தோன்றுகின்றது.

நகரில் வாழ்ந்த மக்களின் அதீத பாவங்கள் காரணமாக சொதோம், கொமோரா,அத்மா, செபோயிம் நகரங்கள் மீது "ஆண்டவர் வானத்திலிருந்து கந்தகமும் நெருப்பும் பொழியச் செய்தார்" [1]. அது தொடக்கம் இந்நகரங்களின் பெயர் பாவத்துகும் அதன் மூலம் கடவுளால் வரும் அழிவுக்கும் உதாரணமாக பயன்படுத்தப்படுகிறது.[2].
Remove ads
அமைவு
சொதோம் நகரமானது ஐந்து நகரங்களின் தலைமை நகரமாகும். இவற்றின் அமைவிடம் பற்றிய ஐயம் நிலவுகிறது. பிரபல வரலாறாசிரியரான ஜொசபசின் கருத்துப்படி இது சாக்கடலின் தெற்கில் அமைந்துள்ளது.[3]. கொண்டர் என்ற வரலாற்றாசிரியரின் கருத்துப்படி சாக்கடலுக்கு வடக்கே 7 மைல் தூரத்தில் உள்ள டெல் எஷ்-சகுர் என்ற இடமாகும். வேறு சிலரின் கருத்து இது சாக்கடலுக்கு தெற்கே 3 மைல் தூரத்தில் உள்ள எஸ்-சபீக் என்ற இடமாகும்.
இந்நகரங்கள் கூட்டாக "சவெளியின் நகரங்கள்" என விவிலியத்தில் அழைக்கபப்ட்டுள்ளது. ஆதியாகமம் 13:10 இல் இவை யோர்தான் நதிக்கரையில் இருந்ததாக கூறப்ப்பட்டுள்ளது. விவிலியத்தின் படி, அபிரகாமின் மைத்துனரான லோத்து என்பவர் சோதோம் நகருக்கு அருகாமையில் காணப்பட்ட செழிப்பான புல்வெளிகள் காரணமாக அங்கே வசித்து வந்தார்.
Remove ads
ஆதாரங்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads