சோகத்தூர் யோகநரசிம்ம சுவாமி திருக்கோயில்

தமிழ்நாடு சொகத்தூரில் உள்ள இந்து கோவில் From Wikipedia, the free encyclopedia

Remove ads

சோகத்தூர் யோகநரசிம்ம சுவாமி திருக்கோயில் தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசி தாலுக்காவில் அமைந்துள்ள புராதனமான நரசிம்மர் திருக்கோயில். கலியுகத்தின் ஆரம்பத்தில் ’சோக அபஹத்ருபுரம்’ (சோகத்தைப் போக்கக்கூடிய தலம்) என்று வழங்கப்பட்டது.[1]

விரைவான உண்மைகள் சோகத்தூர் யோகநரசிம்ம சுவாமி திருக்கோயில், பெயர் ...
Remove ads

வரலாறு

கலியுகம் ஆரம்பித்த போது மக்களுக்கு ஏற்படப்போகும் துன்பங்களை நினைத்து வருந்திய பிரம்மதேவர் தவம் செய்து தம் சோகத்தைப் போக்கிக் கொண்ட திருத்தலம். மக்களுக்கு தாம் துணையிருப்பதாக யோகநரசிம்மர் பிரம்மதேவருக்கு வாக்களித்த திருத்தலம். [1]

வைணவ அடியார்களில் முக்கியமானவரான நாதமுனிகளின் எட்டு சீடர்களில் ஒருவர் மகான் ஸ்ரீ சோகத்தூர் ஆழ்வான். சோகத்தூர் ஆழ்வாரது அவதாரத்தலமிது. அகோபில மடத்தின் 16ஆம் பட்டத்தவரான ஸ்ரீமதே ஸ்ரீவண்சடகோப ஸ்ரீ சடகோப யதீந்திர மகாதேசிகனின் அவதாரத்தலமிது. [1]

Remove ads

மடைப்பள்ளியும் கிணறும்

2008 ஆம் ஆண்டு இத்திருக்கோயிலின் பழுதடைந்திருந்த கிணற்றையும் மடைப்பள்ளியையும் சீர்செய்ய தேவைப்பட்ட இரண்டு இலட்ச ரூபாய்க்காக பக்தர்களிடம் வேண்டுகோள் விடப்பட்டது.[1]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads