சோடியம் பீனாக்சைடு

பீனாலுடைய இணை காரம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

சோடியம் பீனாக்சைடு (Sodium phenoxide) என்பது NaOC6H5 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். வெண்மை நிறத்தில் ஒரு படிகத் திண்மமாக இது காணப்படுகிறது. இச்சேர்மத்தின் எதிர்மின் அயனியான பீனாக்சைடு பீனாலேட்டு என்றும் அறியப்படுகிறது, இது பீனாலுடைய இணை காரம் ஆகும். அரைல் ஈதர் போன்ற பல கரிமச் சேர்மங்களைத் தயாரிக்க உதவும் ஒரு முன்னோடிச் சேர்மமாக சோடியம் பீனாக்சைடு பயன்படுகிறது.

விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
Remove ads

கட்டமைப்பு

பிற சோடியம் ஆல்காக்சைடுகளைப் போலவே படிக சோடியம் பீனாலேட்டும் Na-O பிணைப்புகளாலான சிக்கலான கட்டமைப்பை ஏற்கிறது. கரைப்பானற்ற பொருள் ஒரு பலபகுதிச் சேர்மமாகும். ஒவ்வொரு சோடியம் மையமும் மூன்று ஆக்சிசன் ஈந்தணைவிகளுடனும் பீனால் வளையத்துடனும் பிணைக்கப்பட்டிருக்கிறது. சோடியம் பீனாக்சைடின் கூட்டுவிளை பொருட்கள் கியுபேன்-வகைக் கொத்துகளாகும் [NaOPh]4(HMPA)4.[1]

தயாரிப்பு

பீனாலுடன் சோடியம் ஐதராக்சைடைச் சேர்த்து சூடுபடுத்துவதால் சோடியம் பீனாக்சைடு கரைசல் உருவாகிறது [2]. நீரிலி வகை வழிப்பெறுதிகளை பீனாலுடன் சோடியத்தைச் சேர்த்து தயாரிக்கிறார்கள்.

Na + HOC6H5 → NaOC6H5 + 1/2 H2

பென்சீன்சல்போனிக் அமிலத்தை காரகலந்திணைப்பு வினைக்கு உட்படுத்தி சோடியம் பீனாக்சைடு உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்வினையில் சல்போனேட்டு குழுக்கள் ஐதராக்சைடு குழுக்களால் இடப்பெயர்ச்சி செய்யப்படுகின்றன.

C6H5SO3Na + 2 NaOH → C6H5ONa + Na2SO3

ஒரு காலத்தில் இத்தயாரிப்புப் பாதையில் பீனால் தொழில்முறையில் தயாரிக்கப்பட்டது.

Thumb Thumb

Remove ads

வினைகள்

சோடியம் பீனாக்சைடு ஒரு மிதமான காரமாகும். குறைந்த pH' இல் இது பீனாலைக் கொடுக்கிறது.

PhOH PhO + H+          (K = 10−10)

பீனைல் ஈதர்களையும் உலோக பீனாலேட்டுகளையும் தயாரிக்க சோடியம் பீனாக்சைடு பயன்படுகிறது:[2]

NaOC6H5 + RBr → ROC6H5 + NaBr

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads