சோட்டா நாக்பூரின் நாகவன்ஷிகள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சோட்டாநாக்பூரின் நாகவன்ஷிகள் (கோக்ரா தலைவர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள் ), சோட்டா நாக்பூர் பீடபூமி பகுதியை (நவீன சார்க்கண்டு ) ஆட்சி செய்த ஒரு பண்டைய இந்திய வம்சமாகும். கி.பி 83க்குப் பிறகு எஞ்சியிருக்கும் மிகப் பழமையான வம்சமாக இருந்தது. 1817 முதல் 1947 வரை முன்னாள் பீகார் மாகாணத்தில் , பிரிட்டிசு இந்தியப் பேரரசின் காலத்தில் , பல ஜமீந்தாரி தோட்டங்களில் சோட்டாநாக்பூர் ஜமீந்தாரியும் ஒன்றாகும் [1] [2] [3] லால் சிந்தாமணி சரன் நாத் சகாதேவ் (1931–2014) இந்தப் பகுதியை இந்திய குடியரசில் இணைக்கும் வரை வம்சத்தின் கடைசி ஆளும் மன்னராக இருந்தார். [4] [5]
Remove ads
தோற்றம்
நாகவன்ஷிகளின் தோற்றம் ஒரு மர்மாகவே உள்ளது. [6]
நாகவன்ஷிகள் தங்கள் வம்சாவளியை நாகர்களிடமிருந்து தொடங்குகிறார்கள். [7] [8] நாகவன்ஷிகளின் கூற்றுப்படி, அவர்களின் வம்சம் புண்டரிகா நாகர் என்பவரிடமிருந்து தொடங்குகிறது. ஒரு கதையின்படி, அஸ்தினாபுர மன்னர் சனமேசயனால் கொல்லப்படுவதைத் தவிர்ப்பதற்காக, புண்டரிகா நாகர் ஒரு பிராமணரின் ஆளுமையை ஏற்றுக்கொண்டு, வாரணாசியில் அவரது வீட்டில் சாத்திரங்களைப் படித்தார். இவரது புத்திசாலித்தனத்தால் ஈர்க்கப்பட்ட பிராமணர் தனது மகள் பார்வதியை அவருக்குத் திருமணம் செய்து வைத்தார். தனது பிளவுபட்ட நாக்கு காரணமாக, அவர் எப்போதும் மனைவியின் பின்பக்கமே தூங்கினார். இரகசியத்தை தனது மனைவி தெரிந்துகொள்வதைத் தவிர்க்க, பூரிக்கு யாத்திரை செல்கிறார். சார்க்கண்டு செல்லும் வழியில் மனைவி ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தார். வழக்கப்படி, மனைவி அல்லது கணவரின் ரகசிய ஆசை நிறைவேற வேண்டும். நாகர் தனது அடையாளத்தை வெளிப்படுத்த நிர்பந்திக்கப்பட்டு, பாம்பு வடிவத்தை எடுத்துக் கொண்டு தண்ணீரில் மூழ்கினார். துக்கத்திலிருந்த அவரது மனைவி உடன்கட்டை ஏற முயன்றாள். அந்த நேரத்தில் சூரிய விக்கிரகத்துடன் அங்கு வந்த ஜனார்தன் என்ற ஒரு பிராமணரிடம் புண்டரிகா நாகர் தனது தனது கதையைக் கூறி குழந்தையை காப்பாற்றுமாறு கேட்டுக்கொண்டார். பிராமணர் குழந்தைக்கு பானி முகுத் ராய் என்று பெயரிட்டார். அவர் குழந்தையை சுட்டியாம்பே கிராமத்தின் முதல்வர் மதுரா முண்டாவின் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். மதுரா இக்குழந்தையை தத்தெடுத்து தனது மகனுடன் சேர்த்தே வளர்த்தார். பின்னர், பானி முகுத் ராய் அவரது குணங்கள் காரணமாக மன்னன் ஆனார். பானி முகுத் ராய்க்குப் பிறகு அவரது மகன் முகுத் ராய் ஆட்சிக்கு வந்தார். அவரது பேரரசின் பெயர் 'நாக்பூர் தேசம்' எனப்பட்டது. நாகவன்ஷி பாரம்பரியத்தின் படி, இந்த வம்சத்தை மன்னர் பானி முகுத் ராய் நிறுவினார். இருப்பினும், பானி முகுத் ராயின் கதை பெரும்பாலும் ஒரு கட்டுக்கதையாகவே கருதப்படுகிறது. [9] [10]
வெவ்வேறு ஆதாரங்களின்படி, இவ்வம்சம் கி.பி 5ஆம் நூற்றாண்டில் குப்தப் பேரரசின் வாரிசு மாநிலமாக நிறுவப்பட்டது. பானி முகுத் ராய் முதல் மன்னராக இருந்துள்ளார். [11]
Remove ads
வரலாறு
"நாகவன்ஷிகளின்" கூற்றுப்படி, பானி முகுத் ராய் முதலாம் நூற்றாண்டில் நாகவன்ஷி வம்சத்தின் நிறுவனர் ஆவார். இருப்பினும் கதை பெரும்பாலும் ஒரு கட்டுக்கதை என்றே கருதப்படுகிறது. [12]
12 ஆம் நூற்றாண்டில், மன்னர் பீம் கர்ன் குக்ராகரில் இருந்து ஆட்சி செய்து கொண்டிருந்தார். இந்த இடங்களில் பல பழங்கால அரண்மனைகள், கோயில்கள், நாணயங்கள் மற்றும் மட்பாண்டங்கள் கிடைத்துள்ளன. ராஞ்சி மாவட்டத்தில் பித்தோரியா அருகே சூரிய கோவிலின் சிலையின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை கி.பி 12ஆம் நூற்றாண்டில் தேதியிடப்பட்டுள்ளன. [13] [14] [15] 1098-1113 க்கு இடையில், நாகவன்ஷிகள் குக்ராகரில் இருந்து ஆட்சி செய்யத் தொடங்கினர்.முகலாய வரலாற்றாசிரியர் மிர்சா நாதன் இப்பகுதியை கோக்ராதேசம் என்று குறிப்பிடுகிறார் . [16] 1585இல், மது சிங்கின் ஆட்சியில் முகலாய படையெடுப்பு ஏற்பட்டது. அவர் முகலாயர்களின் துணை ஆட்சியாளராக மாறினார். முகலாயர்களுடனான உறவைத் திரும்பப் பெறுவதற்காக ராஜா துர்ஜன் சால் ஆக்ராவில் உள்ள சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் அவர் உண்மையான வைரங்களை அடையாளம் கண்டதற்காக விடுவிக்கப்பட்டார். அவர் நவரத்தன்கரில் அரண்மனைகள், கோயில்கள் மற்றும் குளங்களை கட்டினார். இரகுநாத் ஷாவும் (1665-1706) முகலாயர்களின் துணை ஆட்சியாளராக இருந்தார். இவரது ஆட்சிக் காலத்தில், போயராவில் உள்ள மதன் மோகன் கோயில் மற்றும் ஜெகந்நாத் கோயில் உட்பட பல கோயில்களைக் கட்டினார். இவருக்குப் பிறகு இவரது மகன் யதுநாத் ஷா ஆட்சிக்கு வந்தார் (1706 - 1724). [17]


பக்சார் சண்டைக்குப் பிறகு, பீகார், வங்காளம் மற்றும் ஒடிசாவிலிருந்து வருவாய் வசூலிக்கும் உரிமையை பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் பெற்றது. 1772ஆம் ஆண்டில், நாகவன்ஷிகள் பிரிட்டிசு ஆட்சியின் அடிமையாக ஆயினர். 1795 முதல் 1800 வரை, மராட்டியர்கள் சோட்டாநாக்பூரை ஆக்கிரமித்து, கொள்ளையடித்து தங்களது வருவாயை பெருக்கிக் கொண்டனர். மராட்டியர்களின் ஊடுருவல்களைச் தடுக்க ஆங்கிலேயர்கள் சோட்டாநாக்பூரில் இராணுவப் படைகளை நிறுத்தினர். நாகவன்ஷி மன்னரின் கீழ் இருந்த துணை சாகிர்களும் ஜமீந்தார்களும் வருவாயை செலுத்த மறுத்ததால், சோட்டாநாக்பூர் 1817இல் பிரிட்டிசு கிழக்கிந்திய நிறுவனத்தின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது. மேலும் நாகவன்ஷி ஆட்சியாளர்கள் ஜமீந்தார்களாக பதவியிறக்கம் செய்தனர். நாகவன்ஷி ஆட்சியாளர்கள் தங்கள் தலைநகரை பால்கோட்டிலிருந்து ராத்துக்கு 1870 இல் மாற்றினர் [18]
நாகவன்ஷி வம்சத்தின் கடைசி ஆட்சியாளராக இலால் சிந்தாமணி சரண் நாத் சகாதேவ் (1931 - 2014) இருந்தார். 1952 இல் இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் ஜமீந்தாரி முறை அகற்றப்பட்டது. [19]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads