சோறு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சோறு என்பது அரிசியை அவித்து பதமான நிலையில் பெறப்படும் ஒரு உணவு வகையாகும். இதனைச் சாதம் என குறிப்பிடும் வழக்கும் தமிழில் உண்டு.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |

தமிழர் வாழ்வில் சோறு
தமிழர்களின் பாரம்பரிய உணவுகளில் சோறு முதன்மை உணவுகளில் ஒன்றாகும். பண்டைய காலம் தொட்டே சோறு தமிழர்களின் வாழ்வின் ஒரு அங்கமாக இருந்து வந்துள்ளது. பல புராணங்களிலும் சோறு என்ற சொல் வெகுவாக பயன்படுத்தப்பட்டுள்ளது. சோறு முக்கியமாக கறி, குழம்பு, பொறியல், வறுவல், அப்பளம் போன்ற இன்னும் பலவகை இதர பதார்த்தங்களுடன் சேர்த்தே உண்ணல் தமிழர் வழக்காகும். தமிழரின் உணவு வகைகளில் சோறு ஒரு நாளைக்கு ஒரு நேர உணவாக என்றாவது உண்ணுதல் தமிழர் வழக்கமாகும். கறிகள் அற்ற சோற்றை "வெறும் சோறு" என்று அழைக்கப்படும்.
வினைப்பயன்பாடு
தமிழ் வினைச்சொல் பயன்பாட்டிற்கு ஏற்ப, அரிசியை சோறாக ஆக்கும் செயற்பாட்டை "சோறாக்குதல்" என்பர். சோறாக்கும் போது சோற்றை இரண்டு விதமாக ஆக்கும் வழக்கு தமிழரிடம் உண்டு. ஒன்று அரிசியை பானையில் இட்டு அரிசி அவிந்து சோறாக பதமான நிலையில் பெறுவதற்கு ஏற்ப சரியான அளவில் நீர் விட்டு சமைக்கும் முறையை அல்லது ஆக்கும் முறையை "நிறைகட்டுதல்" என்பர். அதேவேளை சரியான அளவின்றி நீரை விட்டு பின்னர் அரிசி சோறாகும் நிலையில் மிகுதி தண்ணீரை வடித்து எடுக்கும் நிலையை "வடித்தல்" அல்லது "வடித்தெடுத்தல்" என்று குறிப்பிடுவர். அவ்வாறு அரிசி சோறாக மாறும் பதமான நிலைக்கு மேல் வேகுமானால் அது கூழாகிவிடும். அந்த பதநிலையை கூழ் என்பர். சிலவிடங்களில் "கஞ்சி" என்று அழைப்பதும் உண்டு. முதல் நாள் ஆக்கிய சோறு மறுநாள் பயன்படுத்தப்படும் போது அதனைப் பழஞ் சோறு என்பர். பழஞ்சோற்றைச் சிலவிடங்களில் "பழைய சோறு" என்றழைக்கப்படுவதும் உண்டு.
Remove ads
வகைகள்
- அரிசி சோறு
- கம்பஞ் சோறு
- பழஞ் சோறு (பழைய சோறு, கஞ்சி)
- கூட்டாஞ்சோறு
- பெருஞ்சோறு
- சிறுசோறு
- வெண்சோறு
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads