சௌகான்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சௌகான் (Chauhan), வட இந்திய இராஜபுத்திர அரச குலங்களில் ஒன்றாகும். சௌகான் அரச குலத்தை நிறுவியவர் மாணிக் ராய் ஆவார். சௌகான் அரச குலத்தினருள் புகழ் பெற்றவர் தில்லியை தலைநகராகக் கொண்டு, மேற்கு மற்றும் மத்திய இந்தியாவை ஆண்ட மன்னர் முதலாம் பிருத்திவிராச் சௌகான் ஆவார்.

வரலாறு
சௌகான் குலத்தினர், இராஜஸ்தான் பகுதிகளில் வாழ்ந்த வரலாற்று புகழ் மிக்க சக்தி வாய்ந்தவர்கள் ஆவார். கி பி 7ஆம் நூற்றாண்டு முதல் 400 ஆண்டுகள் வரை மேற்கு இந்தியா மற்றும் மத்திய இந்தியாவின் பெரும் பகுதிகளை ஆண்டவர்கள். [1]
சௌகான் அரச குல மன்னர் பிரிதிவிராச் சௌகான், 1192இல் இரண்டாம் தாரைன் போரில் கோரி முகமதுவால் வெல்லப்பட்டார். பின்னர் கி பி 1192இல் குத்புதீன் ஐய்பெக்கின் படையெடுப்பால், சௌகான் அரச குலம் இரண்டாக பிளவுபட்டது. [2]
Remove ads
புகழ் பெற்ற சௌகான் குல அரச மன்னர்கள்
- மாணிக் ராய் கி பி 682
- பிருத்திவிராச் சௌகான் (கி பி 1178–1192)
- குக்கா, சிற்றரசர்[3]
- ஹமீர் தேவ் சௌகான், இராணாதம்பூர்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads