சௌரசேனிப் பிராகிருதம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

சௌரசேனிப் பிராகிருதம் (சமக்கிருதம்: शौरसेनी प्राकृत, Śaurasenī Prākṛta) என்பது ஒரு நடு இந்தோ-ஆரிய மொழியும், நாடகப் பிராகிருத மொழியுமாகும். நடுக்கால இந்தியாவின் வடபகுதியில் நாடகங்களில் சௌரசேனி மொழி முதன்மை மொழியாகப் பயன்படுத்தப்பட்டது. பண்டைய நாடாகிய சூரசேனத்தில் பொ.ஊ.மு. 2ம் நூற்றாண்டிலிருந்து வாய்மொழி வாயிலாகப் பேசப்பட்டு வந்திருக்கக்கூடும் என்றபோதிலும், இம்மொழியிலுள்ள படைப்புகளில் பெரும்பாலானவை 3ம் நூற்றாண்டுக்கும் 10ம் நூற்றாண்டுக்குமிடையில் தோன்றியுள்ளது. பிராகிருத மொழிகளிடையே, செஞ் சமசுகிருதத்துக்கு மிகவும் நெருங்கிய தொடர்புடையது சௌரசேனியாகும். இதன்படி, "செஞ் சமசுகிருதத்துக்கு முதன்மை அடிப்படையாக அமைந்துள்ள, மத்தியதேசத்தின் பண்டை இந்திய [=இந்தோ-ஆரிய] வட்டார வழக்கிலிருந்து இது தோன்றியுள்ளது".[2]:3-4 இம்மொழியின் வழி மொழிகளுள் இந்தி மண்டல மொழிகளும் உள்ளடங்குகின்றன.[3]

விரைவான உண்மைகள் சௌரசேனிப் பிராகிருதம், பிராந்தியம் ...
Remove ads

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads