ஜகார்த்தா வரலாற்று அருங்காட்சியகம்

இந்தோனேசியாவில் உள்ள அருங்காட்சியகம் From Wikipedia, the free encyclopedia

ஜகார்த்தா வரலாற்று அருங்காட்சியகம்
Remove ads

ஜகார்த்தா வரலாற்று அருங்காட்சியகம் (Jakarta History Museum) இந்தோனேஷியாவில் ஜகார்த்தாவில் கோட்டா டுவா என்றழைக்கப்படுகின்ற பழைய டவுன் என்னுமிடத்தில் அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகம் படாகில்லா அருங்காட்சியகம் என்றும் படேவியா அருங்காட்சியகம் என்றும் அழைக்கப்படுகிறது.ஜகார்த்தா, இந்தோனேஷியா. அருங்காட்சியகத்திற்கான இந்தக் கட்டிடமானது 1710 ஆம் ஆண்டில் படேவியாவின் சிட்டி அரங்கம் என்ற நிலையில் கட்டப்பட்டது. ஜகார்த்தா வரலாற்று அருங்காட்சியகம் 1974 ஆம் ஆண்டில் திறந்து வைக்கப்பட்டது. இந்த அருங்காட்சியத்தில் வரலாற்றுக்கு முந்தைய கால நகர வரலாறு, 1527 ஆம் ஆண்டு ஜெயகார்த்தா நகரம் அமைதல், மற்றும் 16 ஆம் நூற்றாண்டு முதல் இந்தோனேசியா சுதந்திரம் பெற்ற காலமான 1945 ஆம் ஆண்டு வரையிலான டச்சு காலனித்துவ காலம் ஆகியவற்றைக் கொண்ட பொருள்களைக் கொண்டு அமைந்துள்ளது.

விரைவான உண்மைகள் நிறுவப்பட்டது, அமைவிடம் ...

இந்த அருங்காட்சியகம் (முன்னாள் படேவியா நகர சதுக்கம் என்றழைக்கப்பட்ட) ஃபத்தாஹில்லா சதுக்கத்தின் தெற்கே வயாங் அருங்காட்சியகம் மற்றும் ஃபைன் ஆர்ட் மற்றும் பீங்கான் அருங்காட்சியகத்திற்கு அருகில் அமைந்துள்ளது. இந்த கட்டிடம் ஆம்ஸ்டர்டாம் நகரில் அமைந்துள்ள ராயல் அரண்மனையைப் போன்ற வடிவில் அமைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.[2]

Remove ads

வரலாறு

Thumb
படேவியாவில் உள்ள நகர அரங்கத்தின் வரைபடம் (18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் டச்சு ஓவியர் ஜோகன்னஸ் ராச் வரைந்தது)

அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ள இடத்தில் முன்பு படேவியாவின் நகர அரங்கம் ஆக இருந்தது. முதல் கட்டடம் 1627 ஆம் ஆண்டில் தற்போதைய கட்டிடத்தின் இருப்பிடத்தில் அமைக்கப்பட்டது. இந்த கட்டிடத்தின் கட்டுமானம் 1649 ஆம் ஆண்டு வரை தொடர்ந்தது. 1707 ஆம் ஆண்டில், கட்டிடம் ஒட்டுமொத்தமாக புதுப்பிக்கப்பட்டது. அப்போது புதுப்பிக்கப்பட்ட வடிவமே தற்போதைய கட்டிடம் ஆகும். தற்போதைய கட்டிடத்தின்போர்டிகோ உட்படபல அம்சங்கள் இந்த ஆண்டு அமைக்கப்பட்டவையாகும்.1710 ஆம் ஆண்டில் இக்கட்டடத்தின் புனரமைப்பு நிறைவு பெற்றது. டச்சு கிழக்கிந்திய கம்பெனியின் நிர்வாக தலைமையக ஆளுநராக இருந்த ஜெனரல் ஆபிரகாம் வான் ரிபீக் இந்த கட்டிடத்தைத் திறந்து வைத்தார். [3]

டச்சு காலனித்துவ அரசாங்கம்

Thumb
நகர அரங்கக் கட்டிடத்தின் முன்பு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது (ca. 1900)

டச்சு கிழக்கிந்திய கம்பெனியின் திவாலா ஆனதற்குப் பின்னர், இந்த கட்டிடம் டச்சு காலனித்துவ அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்டு காலனித்துவ அரசாங்கத்தின் நகர அரங்கமாக பயன்படுத்தப்பட்டது.

நகரம் தெற்கு நோக்கி தொடர்ந்து விரிவடைய ஆரம்பிக்கவே நகர மண்டபம் என்ற நிலையில் கட்டிடத்தின் செயல்பாடு 1913 ஆம் ஆண்டில் நிறைவுக்கு வந்தது.[4]

சுதந்திரத்திற்குப் பிந்தைய காலம்

1945 ஆம் ஆண்டில் இந்தோனேசியாவிற்கான சுதந்திரம் அறிவிக்கப்பட்ட பின்னர், இந்த கட்டிடம் மேற்கு ஜாவா கவர்னர் அலுவலகமாக 1961 ஆம் ஆண்டு வரை பயன்படுத்தப்பட்டது, ஜகார்த்தா ஒரு சுயாதீன சுயாட்சியாக அறிவிக்கப்பட்டது. பின்னர், இந்த கட்டிடம் கோடிம் 0503 ஜகார்த்தா பாரத்தின் தலைமையகமாக பயன்படுத்தப்பட்டது. [3]

1970 ஆம் ஆண்டில், ஃபத்தாஹில்லா சதுக்கம் ஒரு கலாச்சார பாரம்பரியமாக அறிவிக்கப்பட்டது.[5] இந்த முயற்சி டி.கே.ஐ ஜகார்த்தா அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட ஜகார்த்தா நகரத்தின் வரலாற்றுப் பகுதியின் வளர்ச்சியின் ஆரம்பமாக அமைந்தது. ஜகார்த்தா வரலாற்று அருங்காட்சியகத்தில் ஜகார்த்தா நகரத்தின் வரலாறு தொடர்பான அனைத்து வகையான கலாச்சார பாரம்பரிய கலைப்பொருட்களும் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. மேலும் அது ஒரு சேகரிப்பு, பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மையமாகவும் செயல்படுகிறது. 1974 மார்ச் 30 ஆம் நாளன்று ஒரு அருங்காட்சியகமாக அறிவிக்கப்பட்டது.[6]

Remove ads

கட்டிடக்கலை

இந்த கட்டிடம் ஒரு பொது சதுக்கத்தின் முன் அமைந்துள்ளது, இது கடந்த காலத்தில் நகர அரங்கம் என்று அழைக்கப்பட்டது. இந்த சதுக்கம் தற்போது ஃபத்தாஹில்லா சதுக்கம் என்றழைக்கப்படுகிறது. சதுரத்தின் மையத்தில் ஒரு நீரூற்று உள்ளது, இது காலனித்துவ காலத்தில் நீர் விநியோகமாக பயன்படுத்தப்பட்டது. சதுக்கத்தில் அமைந்துள்ள ஒரு போர்த்துகீசிய பீரங்கி உள்ளது. அதில் உள்ள ஒரு உருவம் உள்ளூர் மக்களால் பெண்கள் கருவுறுதலைத் தூண்டுதலான கருத்தினைக் கொண்டதாக நம்பப்படுகிறது. இந்த சதுக்கம் மரணதண்டனை நிறைவேற்றப்படும் இடமாகவும் பயன்படுத்தப்பட்டது.[5]

ஆம்ஸ்டர்டாமில் உள்ள அரண்மனை கலைப்பாணியில் இந்த கட்டடம் கட்டப்பட்டது.[2]

Remove ads

சேகரிப்புகள்

ஜகார்த்தா வரலாற்று அருங்காட்சியகத்தில் சுமார் 23,500 பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் சில டி ஓட் படேவியா அருங்காட்சியகத்திலிருந்து (தற்போது வயாங் அருங்காட்சியகம்) பெறப்பட்டவையாகும். இந்த சேகரிப்பில் டச்சு கிழக்கிந்திய நிறுவனத்தின் கலைப்பொருள்கள், வரலாற்று வரைபடங்கள், ஓவியங்கள், மட்பாண்டங்கள், தளவாடங்கள் மற்றும் வரலாற்றுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த தொல்பொருள் பொருள்கள், பண்டைய கல்வெட்டுகள் மற்றும் வாள் போன்றவை அடங்கும். ஜகார்த்தா வரலாற்று அருங்காட்சியகம் மேலும் பெடாவி பாணியிலான மரத்தால் அமைந்த கலைப்பொருள்களை அதிக எண்ணிக்கையில் கொண்டுள்ளது. அவை 17 ஆம் நூற்றாண்டு முதல் 19 ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தைச் சேர்ந்தவையாகும். இங்குள்ள சேகரிப்பில் வரலாற்றுக்கு முந்தைய ஜகார்த்தா அறை, தருமாநேகரா அறை, ஜெயகர்த்தா அறை, பாடகில்லா அறை, சுல்தான் ஆகங்க் அறை மற்றும் எம்.எச்.தம்ரீன் அறை போன்ற அறைகள் காணப்படுகின்றன.[5]

பாதுகாப்பு

Thumb
மார்ச் 2015 இல் அருஙகாட்சியகத்தின் தோற்றம்

இந்த அருங்காட்சியகம் தற்காலிகமாக ஜூலை 2011 இல் பாதுகாப்பு மேற்கொள்வதற்காக மூடப்பட்டது. டச்சு அரசாங்கத்தின் உதவியுடன் நடத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் 2012 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டன [7] இதன் புதப்பிக்கும் பணி பிப்ரவரி 2015 ஆம் நாளில் நிறைவடைந்தது. ஒரு புதிய "பாதுகாப்பு அறை" அப்போது இக்கட்டடத்தில் சேர்க்கப்பட்டது. அதில் பழைய படேவியாவின் எதிர்காலத்திற்காக அதன் கொள்கை விளக்கம் பொறிக்கப்பட்டது.[8]

Remove ads

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads