ஜக் மந்திர்

From Wikipedia, the free encyclopedia

ஜக் மந்திர்
Remove ads

ஜக் மந்திர் ஆனது பிசோலா ஏரியில் உள்ள தீவில் கட்டப்பட்டுள்ள அரண்மனை. இது ஏரி தோட்ட அரண்மனை (Lake Garden Palace) எனவும் அழைக்கப்படுகிறது. இது இந்திய மாநிலமான ராஜஸ்தானின் உதய்ப்பூர் நகரில் அமைந்துள்ளது. இதைக் கட்டியவர்கள் மேவார் ராச்சியத்தின் மூன்று மகாராணாக்களாகிய சிசோடியா ராஜபுதின மன்னர்கள். இந்த அரண்மனையின் கட்டுமானம் 1551ல் மகாராணா அமர் சிங் ஆரம்பித்தார். பின்னர் மகாராணா கரன் சிங் (1620–1628) தொடர்ந்து கட்டினார், இறுதியில் மகாராணா ஜகத் சிங் I (1628–1652) கட்டி முடித்தார். முந்தைய மகாராணா ஜகத் சிங்கை கவுரவிக்கும் விதமாக ஜகத் மந்திர் என பெயரிடப்பட்டது. இவ்வரண்மனையை மன்னர் குடும்பத்தினர் கோடை வாசத்தலமாகவும், விருந்து கொடுக்கவல்ல சொகுசு அரண்மனையாகவும் பயன்படுத்தினர்.[1][2][3][4][5][6]இந்த அரண்மனை இரண்டு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் புகலிடம் கோருவோருக்கு அடைக்கலம் அளித்துள்ளது.[1][7]

விரைவான உண்மைகள் ஜக் மந்திர் அல்லது ஏரி தோட்ட அரண்மனை, பொதுவான தகவல்கள் ...
Remove ads

படத்தொகுப்பு

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads