சனகர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சனகர் (Janaka) என்பவர் மிதிலாபுரி என்கிற நாட்டின் அரசனாவார். இவர் மனைவியின் பெயர் சுனைனா. இராமாயணக் கதையின்படி இவர் சனகபுரியை ஆண்டு வந்த இராசரிசி ஆவார். இவர் இராமாயணக் காவிய நாயகி சீதையின் வளர்ப்புத் தந்தை ஆவார். அத்துடன் இலட்சுமணனின் மனைவியான ஊர்மிளாவின் தந்தையும் இவரே. சனகரின் மகள் என்பதாலேயே சீதைக்கு ஜானகி என்ற பெயர் கிடைத்தது. சனகர் எனும் சொல்லுக்கு தந்தை என்று பொருள்.[1]


Remove ads
சிவதனுசின் கதை
தட்ச பிரகஸ்பதியின் யாகத்தில் தன்னை மாய்த்துக்கொண்டாள் சதி தேவி். அதனால் கோபமுற்ற சிவபெருமான் தட்சனின் யாகத்தில் கலந்து கொண்ட அத்தனை தேவர்களையும், அழிப்பதற்காக சிவதனுசினை எடுத்து அம்பினை பூட்டினார். அதற்குள் தேவர்கள் அனைவரும் சிவபெருமானிடம் தங்களைக் காக்க வேண்டினர். அதனால் சிவபெருமான் மனம் மாறி, சிவதனுசினை தேவர்களின் மூத்தவரான தேவராதன் என்பவருக்கு அளித்தார்.
அந்த சிவதனுசை தேவராதம் வம்சத்தில் பாதுகாத்துவந்தார்கள். தேவராதம் மறையும் போது, அவர் சந்ததிகள் அதனை பாதுகாத்துவந்தார்கள். சிவதனுசின் மேன்மை புரிந்தவர்கள் வம்சத்தில் ஜனகர் தோன்றியதால், அவருக்கு சிவதனுசு கிடைத்தது.
சனகர் மகா யாகம் செய்த சமயம் வருணன் ஜனகரின் யாகத்தைப் போற்றி ருத்திர வில் (சிவ தனுசு) மற்றும் இரண்டு அம்புறாத் தூணிகளையும் சினகருக்குத் தந்திருந்தான். [2]
Remove ads
சுயம்வரம்
சீதை திருமண வயதை எட்டியதும், தான் வைத்திருந்த சிவதனுசு என்னும் வில்லை வளைப்பவருக்கு சீதையை மணமுடித்துத் தருவதாக அறிவித்தார்.[3] சீதைக்கு சுயம்வரம் மிதுலை நாட்டில் பெரும் விழாவாக நடைபெற்றது. அப்போது விஸ்வாமித்திர முனிவருடன் இராமனும், இலக்குவனும் அங்கு வந்தார்கள். சிவதனுசை நாண்பூட்டி உடைத்தார் இராமர். அதனால் சீதையை இராமருக்கு திருமணம் செய்துதந்தார் சனகர்.
பிரகதாரண்யக உபநிடதம்
இராசரிசி சனகர், அரசவையில் கூடியிருந்த முனிவர்களிடம், பிரம்மக்ஞானத்தை சரியாக விளக்குபவருக்கு ஆயிரம் பசுக்களை தானமாக தருகிறேன் என்றார். ஆனால் ஒரு முனிவரும் பிரம்ம வித்தை என்ற பிரம்ம ஞானத்தை விளக்க முன் வராத நிலையில், மகரிசி யாக்யவல்கியர் பிரம்ம ஞானத்தை சனகர் உள்ளிட்ட முனிவர்களுக்கு எடுத்துக் கூறினார். இந்த நிகழ்வு பிரகதாரண்யக உபநிடதத்தில் விரிவாக கூறப்பட்டுள்ளது.[4]
காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads