ஜாக்கஸ் தெரிதா

From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஜாக்கஸ் தெரிதா (/ʒɑːk ˈdɛr[invalid input: 'ɨ']də/; பிரெஞ்சு மொழி: [ʒak dɛʁida]; ஜாக்கி ஏலி தெரிதா;[1] 15ம் திகதி ஜூலை மாதம் 1930ம் ஆண்டு பிறந்தார். அவர் இறந்த நாள் அக்டோபர் 9, 2004. இவர் தலைசிறந்த பிரெஞ்சு பின்-அமைப்பியல் சிந்தனையாளர். இவர் பிரெஞ்சு அல்ஜீரியாவில் பிறந்தார். இவர் யூத இனத்தைச் சேர்ந்தவர். ஜாக்கஸ் தெரிதா பொருட்குறி பகுப்பாய்வு எனப்படும் கட்டவிழ்ப்பு (Deconstruction) கொள்கையை வகுத்தவர் ஆவார். இவர் பின்-அமைப்பியல் மற்றும் பின் நவீனத்துவ தத்துவம் தொடர்புடைய முக்கிய நபர்களில் ஒருவராவார்.[2]

விரைவான உண்மைகள் ஜாக்கஸ் தெரிதா, பிறப்பு ...
Remove ads

தெரிதாவின் சிந்தனைப் படைப்புகளும் ஆய்வுகளும்

தெரிதா 40க்கும் அதிகமான ஆய்வு நூல்களையும் நூற்றுக்கணக்கான கட்டுரைகளையும் எழுதி வெளியிட்டுள்ளார். மேலும் பல உரைகளையும் ஆற்றியுள்ளார். மனித பண்பாட்டியல் துறை, சமூக அறிவியல், மெய்யியல், இலக்கியம், சட்டம்,[3][4][5] மானிடவியல்,[6] வரலாற்று ஆய்வியல்,[7] மொழியியல்,[8] சமூக-மொழிவியல்,[9] உளப்பகுப்பியல், அரசியல் கோட்பாட்டியல், பெண்ணியம், பால்வகையியல் போன்ற எண்ணிறந்த துறைகளில் இவருடைய ஆழ்ந்த தாக்கம் உணரப்பட்டுள்ளது.

மேலும் தெரிதாவின் சிந்தனை ஐரோப்பா, தென் அமெரிக்கா போன்ற பகுதிகளிலும் செல்வாக்குப் பெற்றுள்ளது. இது குறிப்பாக இருப்பியல், அறவியல், அழகியல், விளக்கவியல், மொழிமெய்யியல் போன்ற துறை ஆய்வுகளில் தெரிகிறது.

தெரிதாவின் சிந்தனைத் தாக்கம் கட்டடவியல், இசையியல்,[10] கலை,[11] கலை விமர்சனம் ஆகிய துறைகளிலும் காணப்படுகிறது.[12]

Remove ads

மேற்கோள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads