ஜாக் சிராக்
1995 முதல் 2007 வரை பிரான்சின் அதிபர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
யாக் ரெனே சிராக் (Jacques René Chirac, 29 நவம்பர் 1932 – 26 செப்டம்பர் 2019) 1995ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரை பிரான்சின் அதிபராக பணியாற்றிய ஓர் பிரெஞ்சு அரசியல்வாதி. இதற்கு முன்னர் 1974ஆம் ஆண்டு முதல் 1976 வரையும் 1986ஆம் ஆண்டு முதல் 1988 வரையும் இருமுறை பிரான்சின் பிரதமராக இருந்த பெருமை உடையவர்.1977ஆம் ஆண்டு முதல் 1985 வரை பாரிசின் மேயராகப் பணியாற்றி உள்ளார்.
சிராக் பிரெஞ்சு அதிபராக, பான்சுவா மித்தரண்டிற்கு அடுத்து, மிகுந்த நாட்கள் பணியாற்றிய சாதனையும் புரிந்துள்ளார். முதல்முறை ஏழு ஆண்டுகளும் இரண்டாம் தவணையில் ஐந்து ஆண்டுகளும் முழு பணிக்காலமும் அதிபராக இருந்துள்ளார். அதிபர் என்ற முறையில் அண்டோராவின் பதவிவழி இணை-இளவரசராகவும் பிரெஞ்சு "தேசிய கௌரவ படை"(Légion d'honneur)யின் பதவிவழி கிராண்ட் மாஸ்டராகவும் பணியாற்றினார்.படித்தவுடன் மூன்று மாதங்கள் கப்பலில் மாலுமியாக பணியாற்றினார்.
சிராக் வரிவிகிதங்களைக் குறைத்தார்,விலைக் கட்டுப்பாடுகளை தளர்த்தினார், குற்றம், தீவிரவாதம் புரிந்தவர்களுக்கான தண்டனையைக் கடுமையாக்கினார் மற்றும் வணிக தனியார்மயமாக்கலை ஆதரித்தார்.[1] சமூகத்திற்கு பொறுப்புள்ள பொருளியல் கொள்கைகளை ஆதரித்த இவர் 1995ஆம் ஆண்டு தேர்தலில் "சமூகப் பிளவை"(fracture sociale) குறைக்க வேண்டிய தேவையை எடுத்துக்கூறி வென்றார்.[2] இவரது அரசு கட்டுப்படுத்துகின்ற பொருளியல் வளர்ச்சிக் கொள்கைகள் ஐக்கிய இராச்சியம்|பிரித்தானியரின் தாராளமயக் கொள்கைகளுக்கு மாற்றாக இருந்ததைச் சுட்டி அதனை "ஆங்கிலோ-சாக்சன் பெருந்தாராளமயம்" என்றுரைத்தார்.[3]
Remove ads
சோவியத்துடன் உறவு
சோவியத் யூனியனுடான கொள்கையை பின்பற்றி ஸ்டாக்ஹொல்மை ஆதரித்து கையெழுத்திட்டார்.அதனால் அமெரிக்காவுடன் இவருக்கு பகை ஏற்பட்டது.அமெரிக்காவிற்கு விசாவிற்காக விண்ணபித்தபோது இவர் கேள்விக்குள்ளாக்கப்பட்டார்.
அமைச்சர்
1962 இல் , பிரதமர் பாம்பிடுவின் அமைச்சரவையில் அமைச்சராக சேர்ந்தார்.பாம்பிடு கூறும் அனைத்து வேலைகளையும் விரைவாக முடிக்கும் காரணத்தால் புல்டோசர் என்று செல்லமாக அழைக்கப்பட்டார்.ஜனாதிபதியாக 1969 இல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.அப்போது ஃப்ரான்சுக்கு எதிராக கொள்கையை வெளியிட்ட யூ.எஸ்.ஏ வை கடுமையாக சாடினார்.
கிங்கார்ட் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.அப்போது அவர் சிராக்கை பிரதமராக தேர்வு செய்ய வலியுறுத்தினார்.அவர் பிரதமராக இருந்தபோது ஃப்ரான்சில் குறைந்தபட்ச கூலி உயர்த்தப்பட்டது.
Remove ads
பிரதமர் ஒசிராக்
சிராக் பிரதமராக இருந்தபோது ஈராக்கின் ஜனாதிபதியான ஹுசைன் எராளமான எண்ணெய் வளங்களையும், ஆதரவையும் சிராக்கிற்கு வழங்கினார்.அதற்கு கைமாறாக சிராக்கும் ஈராக்கிற்கு அணூலை ஒன்றை வழங்கினார்.அந்த உலை 1981 இல் அழிக்கப்பட்டது.இதனால் இஸ்ரேல் பிரான்ஸின் கடுமையான கண்டனத்திற்கு உட்பட்டது.பிறகு அமெரிக்காவின் படையெடுப்பின் போது ஒசிராக் தொடர்பாக ஃப்ரான்ஸுக்கும் அமெரிக்காவிற்கும் கடுமையான மனக்கசப்பு ஏற்பட்டது.
லஞ்ச புகார்
2007 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக இருந்து பணியாற்றி ஓய்வுப் பெற்றார்.அவரின் மீது லஞ்ச புகார்கள் போடப்பட்டு குற்றம் சாட்டப்பட்டார்.
மறைவு
இதய கோளாறினால் அவதிப்பட்டு அறுவை செய்து கொண்டிருந்தார். முன்னாள் அரசுத்தலைவர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை வைத்துக்கொண்டு வாழ்ந்து வந்தார். சிராக் 2019 செப்டம்பர் 26 அன்று பாரிசில் உள்ள அவரது வீட்டில் காலமானார்[4][5]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads