ஜாதுநாத் சின்கா

From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஜாதுநாத் சின்கா (Jadunath Sinha) (1892 – 10 ஆகத்து 1978) இந்திய தத்துவ அறிஞரும், எழுத்தாளரும், சாக்த சமயவாதியும் ஆவார். இவர் பிரித்தானிய இந்தியாவின் வங்காள மாகாணத்தின், பிர்பூம் மாவடத்தில் உள்ள குரும்கிராம் என்ற கிராமத்தில் 1892-இல் சாக்த குடும்பத்தில் பிறந்தார்.[2]

விரைவான உண்மைகள் ஜாதுநாத் சின்கா, இயற்பெயர் ...

இவர் கொல்கத்தா பல்கலைக்கழக்கத்தில் இளநிலை, முதுநிலை, முனைவர் போன்ற படிப்புகளில் தத்துவவியலில் பட்டங்கள் பெற்றவர். இவர் கொல்கத்தா பல்கலைக் கழகத்தில் படிக்கும் போது, சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் உதவிப் பேரராசியராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இந்து சமயம், இந்தியத் தத்துவம், உளவியல் ஆகிய துறைகளில் பல ஆய்வு நூல்களை எழுதி பிரபல பதிப்பகங்கள் மூலம் வெளியிட்டார். இந்தியத் தத்துவத்தில் பங்களித்த முன்னோடிகளில் இவரும் ஒருவர் ஆவார்.

Remove ads

இராதகிருஷ்ணனுடன் பிணக்கு

மீரட் கல்லூரியில் தத்துவவியல் பேராசிரியராக இருந்த இவர், தனது ஆய்வு நூல்களின் சில பகுதிகளை காப்புரிமை விதிகளை மீறியும், தன் அனுமதியின்றியும், சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் 1927-இல் இயற்றிய இந்தியத் தத்துவியல் [3][4][5][6][7] எனும் நூலில் சேர்த்து வெளியிட்டுள்ளார் எனக்குற்றம் சாட்டி, ருபாய் 20,000 நட்ட ஈடு கோரி கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அடுத்த மாதமே ரூபாய் ஒரு லட்சம் இழப்பீடு கேட்டு இவருக்கு எதிராக இராதாகிருஷ்ணன் வழக்கு தொடர்ந்தார். பின் இந்த வழக்கை நீதிமன்றத்திற்கு வெளியே சியாமா பிரசாத் முகர்ஜி முயற்சியால் இருவரும் சமரசம் செய்து கொண்டு, வழக்குகளை திரும்பப் பெற்றுகொண்டனர்.[8]

Remove ads

எழுதிய குறிப்பிட்டதக்க நூல்கள்

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads