ஜான் டால்ட்டன்

From Wikipedia, the free encyclopedia

ஜான் டால்ட்டன்
Remove ads

ஜான் டால்ட்டன் (John Dalton) FRS (/ˈdɔːltən/; 6 September 1766 – 27 July 1844) ஒரு ஆங்கிலேய வேதியலாளரும், இயற்பியலாளரும், வானிலை அறிஞரும் ஆவார். அவர் நவீன அணுக் கோட்பாட்டை முன்வைத்ததற்கும், நிறக்குருடு பற்றிய ஆய்வினாலும், வளிமங்கள், நீர்மங்கள் பற்றிய ஆய்வினாலும் நன்கு அறியப்படுபவர். அணு எடை குறித்த பட்டியலை முதன்முதலில் வெளியிட்டவரும் இவரே.

விரைவான உண்மைகள் ஜான் டால்ட்டன், பிறப்பு ...
Remove ads

வாயு விதிகள்

விரைவான உண்மைகள் வெளி ஒளிதங்கள் ...

1800-ஆம் ஆண்டு, தனது 34-ஆம் வயதில், மான்செஸ்டர் இலக்கிய தத்துவக் கழகத்துக்குச் செயலர் ஆனார் டால்ட்டன். அங்கே, அதற்கு அடுத்த ஆண்டு, வளிமங்களின் கூறுகள், வெற்றிடத்திலும், வளிமண்டலத்திலும், வெவ்வேறு வெப்பநிலையில் நீராவி மற்றும் பிற வளிமங்களின் அழுத்தம், போன்றவை பற்றிய தனது முக்கிய ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டார்.

0 - 100 °C (32 - 212 °F) இடைவெளியில் பல புள்ளிகளில் நீராவியின் அழுத்தத்தைக் குறித்து ஆய்வுசெய்த டால்ட்டன், மேலும் பல வித நீர்மங்களின் ஆவியழுத்தத்தையும் கவனித்து, சமமான வெப்பநிலை மாற்றத்தில், எல்லா நீர்மங்களின் ஆவியழுத்தமும் சமமாக இருக்கும் என்னும் கோட்பாட்டை முன்வைக்கிறார்.

Remove ads

அணுக் கோட்பாடு

டால்ட்டனின் கண்டுபிடிப்புகளிலேயே முதன்மையாகக் கருதப்படுவது வேதியலில் அணுக் கோட்பாடு என்பது தான். இருப்பினும், அவரது பெயரோடு ஆழப்பதிந்துவிட்ட கோட்பாடு எனினும், அத்தொடர்பு முழுதும் தெளிவாகப் புரிந்துகொள்ளப்படவில்லை.[1]

டால்ட்டனின் அணுக்கோட்பாட்டின் முக்கிய அம்சங்களாவன:

  1. தனிமங்கள் அனைத்தும் அணு என்னும் மிகச்சிறு துகள்களால் ஆனவை.
  2. ஒரு குறிப்பிட்ட தனிமத்தின் அணுக்கள் அனைத்தும் அச்சாக ஒரே அளவு, நிறை, பண்புகளைக் கொண்டிருக்கும். வெவ்வேறு தனிமங்களின் அணுக்கள் இவற்றிலிருந்து வேறுபட்டிருக்கும்.
  3. அணுவை உருவாக்க முடியாது, அழிக்க முடியாது, துளைத்துப் பிரிக்கவும் முடியாது.
  4. வெவ்வேறு தனிமங்களின் அணுக்கள் எளிய முழுவெண் (1 தெடக்கம் 9 வரையான முழுவெண்) விகிதத்தில் கலந்து வேதிச் சேர்மம் ஆக மாறும்.
  5. வேதிவினைகளில், அணுக்கள் ஒன்று சேர்ந்தோ, பிரிந்தோ, மாற்றியமைக்கப்பட்டோ விளங்கும்.
Remove ads

அணுவின் எடை

அணு எடைக்கான முதல் பட்டியலை வெளியிட்டார் டால்ட்டன். அதில் ஹைட்ரஜன், ஆக்சிஜன், நைட்ரஜன், கார்பன், கந்தகம், பாஸ்பரஸ் ஆகிய ஆறு தனிமங்கள் இடம்பெற்றிருந்தன. ஹட்ரஜன் அணுவிற்கு எடை 1 என்ற அனுமானத்தில் இருந்து இது கட்டமைக்கப்பட்டிருந்தது. முதன்முதலில் இதனை எவ்வாறு கண்டறிந்தார் என்பது குறித்த அதிக விவரங்கள் இல்லை. ஆனால் அவருடைய ஆய்வுக்கூடக் குறிப்பேட்டில், 1803 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் ஆறாம் தேதி[2] நீர், அம்மோனியா, கார்பன் டையாகசைடு ஆகிவற்றைப் பற்றிய ஆய்வையொட்டி பல அணுக்களின் எடையை கொண்ட ஒரு பட்டியல் இருக்கிறது.

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads