ஜான் மாயென்

From Wikipedia, the free encyclopedia

ஜான் மாயென்
Remove ads

ஜான் மாயென் (Jan Mayen) ஆர்க்டிக் பெருங்கடலில் உள்ள, நோர்வே இராச்சியத்தின் அங்கமாகவுள்ள, உயர் தீவு ஆகும். தென் மேற்கு- வடகிழக்காக 55 km (34 mi) நீளமும் 373 km2 (144 sq mi) பரப்பளவும், பகுதியும் பனியாறுகளால் மூடப்பட்டும் உள்ளது; பீரென்பெர்கு எரிமலையைச் சுற்றி 114.2 km (71.0 mi)க்கு பனியாறுகளால் மூடப்பட்டுள்ளது. இத்தீவு இரு பகுதிகளாக உள்ளது: பெரிய வடகிழக்கு நோர்டு-ஜான் மற்றும் சிறிய சோர்-ஜான். இவை இரண்டையும் 2.5 km (1.6 mi) அகலமுள்ள குறுநிலம் இணைக்கின்றது. இது ஐசுலாந்திற்கு வடகிழக்கில் 600 km (370 mi) தொலைவிலும் மத்திய கிறீன்லாந்திலிருந்து கிழக்கில் 500 km (310 mi) தொலைவிலும் நோர்வேயின் வடக்கு முனையிலிருந்து மேற்கே 1,000 km (620 mi) தொலைவிலும் அமைந்துள்ளது. இத்தீவு மலைப்பாங்காக உள்ளது; மிக உயரிய சிகரமாக வடக்கில் பீரென்பெர்கு எரிமலை உள்ளது. நில இணைப்புள்ள பகுதியில் இரு பெரிய ஏரிகள் உள்ளன.

விரைவான உண்மைகள் புவியியல், அமைவிடம் ...

தனித்தனியாக நிர்வகிக்கப்பட்டாலும் சுவல்போர்டும் ஜான் மாயெனும் இணைந்த நாட்டு குறியீடு "SJ" பெற்றுள்ளன.

Remove ads
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads