ஜம்சேத்ஜீ டாட்டா

இந்திய தொழிலதிபர், டாடா குழுமத்தின் நிறுவனர் (பிறப்பு 1839) From Wikipedia, the free encyclopedia

ஜம்சேத்ஜீ டாட்டா
Remove ads

ஜாம்செட்ஜி நுசர்வாஞ்சி டாட்டா (Jamshedji Nusserwanji Tata) (மார்ச் 3, 1839 - மே 19, 1904) இந்தியாவின் நவீன தொழில்துறையின் முன்னோடிகளுள் ஒருவராவார். இவர் இந்திய தொழில்துறையின் தந்தை என்று அறியப்படுகிறார்.[1] இவர் பாரிஸ் நகரத்திலேயே நீண்ட காலம் வசித்தார். இவர் இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள நவ்சாரி என்னுமிடத்தில் பிறந்தார். எஃகு உற்பத்திக்குப் பெயர்பெற்ற ஜாம்ஷெட்பூர் நகரத்திற்கு இவருடைய நினைவாகவே இவரது பெயர் சூட்டப்பட்டது. உலகின் பெரும் நன்கொடையாளர்கள் பட்டியலில் ஜாம்சேட் ஜி டாடா முதலிடம் பெற்றுள்ளார்.[2]

விரைவான உண்மைகள் ஜம்சேத்ஜீ நசர்வான்ஜி டாட்டாJamsetji Nasarwanji Tata, பிறப்பு ...
Remove ads

இளமைக் காலம்

ஜம்சேத்ஜீ நசர்வான்ஜி டாட்டா 1839ஆம் வருடம் மார்ச் மாதம் 3-ஆம் தேதி தெற்கு குஜராதில் உள்ள நவ்சாரி என்ற சிறு நகரத்தில் வாழ்ந்த நசர்வான்ஜி டாடா மற்றும் அவர் மனைவி ஜீவன்பாய் டாடாவிற்கு மகனாகப் பிறந்தார். பார்சி சரத்துஸ்திர புரோகிதர்கள் குடும்பத்தில் டாடாதான் முதல் வணிகராகத் திகழ்ந்தார். குடும்பத்தின் குலத்தொழிலான புரோகிதத்தை நசர்வான்ஜி தேர்ந்தெடுத்திருந்தால் வழக்கமான ஒன்றாக இருந்திருக்கும். ஆனால் துணிவுமிக்க இளைஞனான டாடா பாரம்பரியத்தைத் தகர்த்து தன் குடும்பத்திலேயே வணிகத்தில் நுழைந்த முதல் மனிதனாகத் திகழ்ந்தார். அவர் தன் வியாபாரத்தை அன்றைய பம்பாயாக இருந்த இன்றைய மும்பையில் ஆரம்பித்தார்.

தனது 14-வது வயதில் தன் தந்தையுடன் மும்பைக்கு வந்த ஜம்சேத்ஜீ டாடா எல்பின்ஸ்டோன் கல்லுாரியில் இன்றைய இளங்கலைப் பட்டத்திற்கு இணையான 'க்ரீன் ஸ்காலர்' -ஆக படிப்பை முடித்தார். அவர் மாணவனாக இருக்கும்போதே ஹிராபாய் தாபு[3] என்ற பெண்ணை மணந்தார்.[4] 1858-ல் கல்லுாரியிலிருந்து பட்டம் பெற்ற அவர் தனது தந்தை வேலை செய்த வணிக நிறுவனத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். அச்சமயம் 1857 -ன் இந்திய புரட்சிக்காரர்களாக கருதப்பட்டு பிரிட்டிசு அரசாங்கத்தால் அடக்கப்பட்ட கொந்தளிப்பான காலகட்டமாக இருந்தது.

Remove ads

இறப்பு

1900-ஆம் ஆண்டு வியாபார விஷயமாக ஜெர்மனிக்குச் சென்றபோது, டாடா நோய்வாய்ப்பட்டார். ஆபத்தான நிலையிலிருந்த அவர் நெளகீமில் [5] 19 மே 1904 ல் காலமானார். இங்கிலாந்தின் வோகிங், புரூக்வுட் மயானத்திலுள்ள, பார்சியினருக்கான இடுகாட்டில் புதைக்கப்பட்டார்.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads