ஜெயசங்கர் பூபாலபள்ளி மாவட்டம்
தெலுங்கானாவில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஜெயசங்கர் பூபாலபள்ளி மாவட்டம் (Jayashankar Bhupalpally district), இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தின் 31 மாவட்டங்களில் ஒன்றாகும். [2][3][4] இம்மாவட்டம் நவம்பர் 2016-இல் வாரங்கல் மாவட்டத்தின் சில வருவாய் வட்டங்களைக் கொண்டு புதிதாக நிறுவப்பட்டது. [5]இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் பூபாலபள்ளி நகரம் ஆகும்.



Remove ads
புவியியல்
ஜெயசங்கர் பூபாளபள்ளி மாவட்டம் 6,175 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. [6]இம்மாவட்டத்தின் வடக்கில் மகாராட்டிராவின் கட்சிரோலி மாவட்டமும், வடகிழக்கில் சத்தீஸ்கர் மாநிலத்தின் பிஜப்பூர் மாவட்டமும், கிழக்கில் பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டமும், தெற்கில் மகபூபாபாத் மாவட்டமும், மேற்கில் வாரங்கல் கிராமபுற மாவட்டம் மற்றும் பெத்தபள்ளி மாவட்டங்களும் எல்லைகளாகக் கொண்டுள்ளது.
மக்கள் தொகை
2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, ஜெயசங்கர் பூபாலபள்ளி மாவட்டத்தின் மக்கள் தொகை 7,50,000 ஆக உள்ளது. [6]
மாவட்ட நிர்வாகம்
ஜெயசங்கர் பூபாளபள்ளி மாவட்டம், பூபாளபள்ளி மற்றும் முலுக் என இரண்டு [[வருவாய் கோட்டம்|வருவாய்க் கோட்டங்களையும், 15 மண்டல்களையும் கொண்டுள்ளது.
வருவாய் வட்டங்கள்
ஜெயசங்கர் பூபாளபள்ளி மாவட்டத்தின் வருவாய் வட்டங்கள்;[7]
சட்டமன்றத் தொகுதிகள்
இம்மாவட்டம் பூபாளபள்ளி, மந்தனி, முலுக் (தனி) என மூன்று சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. [8]
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads