ஜெய்ப்பூர் மாநகராட்சி
இது இந்தியாவின் பெருநகர மாநகராட்சிகளுல் மிகப்பெரிய மாநகராட்சி ஆகும் From Wikipedia, the free encyclopedia
Remove ads
செய்ப்பூர் மாநகராட்சி அல்லது ஜெய்ப்பூர் மாநகராட்சி இந்தியாவில் மேற்கு பகுதியான ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர் நகரத்தின் மாநகராட்சி ஆகும். ஜெய்ப்பூர் மாநகராட்சியானது மாநகரத்தின் குடிமை உள்கட்டமைப்பை பராமரிப்பது மற்றும் அதனுடன் தொடர்புடைய நிர்வாகக் கடமைகளைச் செய்வதற்கான ஓர் உள்ளாட்சி அமைப்பாகும். மாநகராட்சியானது சுமார் 250 வார்டுகளைக் கொண்டுள்ளது. நாட்டின் மிகப்பெரிய நகரங்களுல் இதுவும் ஒன்று.ஜெய்ப்பூர் மேம்பாட்டு ஆணையம் (ஜேடிஏ) ஜெய்ப்பூரின் திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுக்கு பொறுப்பான அரசு நிறுவனமாகும். ஜெய்ப்பூர் மாநகரமானது ஜெய்ப்பூர் மற்றும் ஜெய்ப்பூர் ரூரல் ஆகிய இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.
Remove ads
ஜெய்ப்பூர் மாநகராட்சி
Remove ads
மாநகராட்சி உறுப்பினர்கள்
மக்கள் தொகை
2011ம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, ஜெய்ப்பூர் நகரத்தின் மக்கள் தொகை 30,46,163 ஆகும். அதில் ஆண்கள் 16,03,125 ஆகவும்; பெண்கள் 14,43,038 ஆகவும் உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்டவர்கள் 3,87,354 ஆகவுள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 900 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு விகிதம் 83.33 % ஆகவுள்ளது.
மொத்த மக்கள் தொகையில் இந்து சமயத்தவர்கள் 23,73,384 (77.91%) ஆகவும்; இசுலாமியர்கள் 5,67,521 (18.63%) ஆகவும்; சமணர்கள் 71,846 (2.36%) ஆகவும்; சீக்கியர்கள் 17,787 (0.58%) ஆகவும்; கிறித்தவர்கள் 11,076 (0.36%) ஆகவும்; மற்றவர்கள் 15,649 (0.15%) ஆகவும் உள்ளனர். [2]
இந்நகரத்தில் இந்தி, ஆங்கிலம் மற்றும் வட்டார மொழிகள் பேசப்படுகிறது.[3]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads