ஜெவர்கி, கர்நாடகா

From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஜெவர்கி (Jevargi) என்பது இந்தியாவின் கர்நாடகாவின் குல்பர்கா மாவட்டத்தில் உள்ள ஒரு நகரமாகும். இது ஜெவர்கி வட்டத்தின் தலைமையகமுமாகும்.

நிலவியல்

இதன் சராசரி உயரம் 393 மீட்டர் (1,289 அடி). இந்த நகரம் 4.25 சதுர கிலோமீட்டர் (1.64 சதுர மைல்) பரப்பளவில் அமைந்துள்ளது.[1] ஜெவர்கி வட்டம், வடக்கே அப்சல்பூர் வட்டம் மற்றும் குல்பர்கா வட்டம், கிழக்கில் சிட்டாபூர் வட்டம், தென்கிழக்கில் ஷாப்பூர் வட்டம், தெற்கே சோராப்பூர் வட்டம் மற்றும் மேற்கில் சிண்த்கி வட்டம் ஆகியவை எல்லைகளாக இருக்கிறது. பீமா ஆறு ஜெவர்கிக்கு வடக்கே பாய்கிறது.

புள்ளி விவரங்கள்

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஜெவர்கி மக்கள் தொகை 25,685 பேரைக் கொண்டது. இதில் ஆண்கள் 12,976 மற்றும் 12,710 பெண்கள் 980 என்ற பாலின விகிதத்தைக் கொண்டுள்ளனர். ஜெவர்கியின் சராசரி கல்வியறிவு விகிதம் 73.83 %. இது தேசிய சராசரியான 75.36% ஐ விடக் குறைவு. ஆண்களின் கல்வியறிவு விகிதம் 82.75% ஆகவும், பெண் கல்வியறிவு விகிதம் 64.78% ஆகவும் இருந்தது. இது பாலினத்தில் தேசிய கல்வியறிவு இடைவெளியை விட சற்று மோசமானது. மக்கள் தொகையில் 15.9 சதவீதம் பேர் ஆறு வயதுக்குட்பட்டவர்கள் ஆகும்.

Remove ads

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads