ஜெஸ்சூர் மாவட்டம்

வங்காளதேசத்தின் க்ஹுல்ன்னா டிவிசன் மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

ஜெஸ்சூர் மாவட்டம்
Remove ads

ஜெஸ்சூர் மாவட்டம் (Jessore District) தெற்காசியாவின் வங்காளதேசத்தின் அறுபத்தி நான்கு மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் ஜெஸ்சூர் நகரம் ஆகும். வங்கதேசத்தின் தென்மேற்கு பகுதியில் ஜெஸ்சூர் மாவட்டம் உள்ளது.

Thumb
வங்காளதேசத்தில் ஜெஸ்சூர் மாவட்டத்தின் அமைவிடம்

எல்லைகள்

இம்மாவட்டம் வங்கதேசத்தின் மேற்கில் இந்தியாவின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது. இதன் தெற்கில் குல்னா மாவட்டம் மற்றும் சத்கிரா மாவட்டமும், கிழக்கில் மகுரா மாவட்டம் மற்றும் நராயில் மாவட்டமும், வடக்கில் ஜென்னைதா மாவட்டமும் எல்லைகளாக உள்ளது.

மாவட்ட நிர்வாகம்

ஜெஸ்சூர் மாவட்டம் 1781-இல் நிறுவப்பட்டது. இம்மாவட்டம் நான்கு நகராட்சிகளையும், எட்டு துணை மாவட்டங்களையும், 92 ஊராட்சி ஒன்றியங்களையும், 1434 கிராமங்களையும் கொண்டுள்ளது.

துணை மாவட்டங்கள்

ஜெஸ்சூர் மாவட்டத்தை நிர்வாக வசதிக்காக பாகெர்பரா, சௌகாச்சா, ஜெஸ்சூர் சதர், ஜிகர்கச்சா, கேசவப்ப்பூர், மணிராம்பூர், அபய்நகர், மற்றும் ஷெர்ஷா என எட்டு துணை மாவட்டங்களைக் கொண்டுள்ளது.

மக்கள் தொகையியல்

2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, ஜெஸ்சூர் மாவட்டத்தின் மக்கள் தொகை 27,64,547 ஆக உள்ளது. [1]அதில் ஆண்கள் 13,86,293 ஆகவும், பெண்கள் 13,78,254 ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் நூறு ஆண்களுக்கு 101 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 1,060 வீதம் உள்ளனர். எழுத்தறிவு 56.50% விழுக்காடாக உள்ளது. 85.5% மக்கள் இசுலாமியர்களாகவும், 14.21% மக்கள் இந்துக்களாகவும் உள்ளனர். ஜெஸ்சூர் மாவட்டத்தின் அஞ்சல் சுட்டு எண் 7400 ஆகும்.

இம்மாவட்டம் வங்காளதேச நாடாளுமன்றத்திற்கு ஆறு உறுப்பினர்களை தேர்தலில் தேர்ந்தெடுக்கிறது.

பொருளாதாரம்

இம்மாவட்டத்தில் கபோதாக்கா, வெய்ரப், சித்திரா, ஹோரியோர், பேட்ரபோத்தி, தண்டரா, கோட்லா மற்றும் இசமோதி முதலிய ஆறுகள் பாய்வதால், இம்மாவட்டத்தில் வேளாண்மை செழித்து காணப்படுகிறது. இங்கு நெல், கோதுமை, கரும்பு, தென்னை, வாழை, வெற்றிலை, பருத்தி, சணல் முதலியவைகள் பயிரிடப்படுகிறது.

போக்குவரத்து

கொல்கத்தாடாக்கா நகரங்களை இணைக்கும், இந்தியாவின் அகல இருப்புப் பாதை ஜெஸ்சூர் மாவட்டம் வழியாக செல்கிறது.

கல்வி

இம்மாவட்டதில் ஜெஸ்சூர் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், ஜெஸ்சூர் மருத்துவக் கல்லூரி, மைக்கேல் ம்துசூதனன் கல்லூரி, இராணுவ மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரிகள், மற்றும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும் உள்ளது.

தட்ப வெப்பம்

ஜெஸ்சூர் மாவட்டத்தின் ஆண்டு சராசரி தட்ப வெப்பம் 9 முதல் 41° செல்சியசு வெப்பம் காணப்படுகிறது. ஆண்டு சராசரி மழைப் பொழிவு 1537 மில்லி மீட்டராக உள்ளது.

மேலதிகத் தகவல்கள் தட்பவெப்ப நிலைத் தகவல், ஜெஸ்சூர், மாதம் ...
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads