ஜேம்சு ஆர்கிரீவ்ஸ்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஜேம்சு ஆர்கிரீவ்சு (James Hargreaves:1720 – 1778[2]). இங்கிலாந்தைச் சேர்ந்த நெசவாளர்; தச்சர் மற்றும் கண்டுபிடிப்பாளர். 1764 இல் நூற்கும் ஜென்னி என்ற இயந்திரத்தைக் கண்டறிந்தவர்.[3] எழுதவும் படிக்கவும் தெரியாத ஆர்கிரீவ்சு கண்டறிந்த இவ்வியந்திரம் தொழிற்புரட்சியின் பொழுது நெசவுத் துறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.[4] இதே நேரத்தில் தாமசு ஹை என்பவரும் நூற்கும் ஜென்னியைக் கண்டறிந்தார்.[5] ஆனால் ஆர்கிரீவ்சு சுழலும் அச்சில் இயங்கும் விதமாக இக்கருவியை மேம்படுத்தினார்.[6] ஆர்கிரீவ்சு இதற்கான காப்புரிமையைப் பெறாமலேயே இக்கருவியினை விற்பனை செய்தார். பிற நெசவாளர்களின் பொறாமை காரணமாக இவரின் வீடு மற்றும் நூற்கும் ஜென்னி இயந்திரங்கள் அடித்து நொறுக்கப்பட்டது.[4] இதனால் ஆர்கிரீவ்சு நாட்டிங்காம் சென்று குடியேறினார்.
ஜேம்சு ஆர்கிரீவ்சின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பிறர் இவ்வியந்திரங்களை உற்பத்தி செய்தனர். ஆனால் அதற்கான தொகை இவருக்கு வழங்கப்படவில்லை. ஏழ்மையான நிலையில் வாழ்ந்த ஆர்கிரீவ்சு 1778 இல் மறைந்த போது 20,000 நூற்கும் ஜென்னிகள் பிரித்தானியாவெங்கும் புழக்கத்தில் இருந்தன.[6]
Remove ads
மேற்கோள்களும் குறிப்புகளும்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads