ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா (செப்டம்பர் 17 1906 - நவம்பர் 1 1996), இலங்கையின் இரண்டாவது சனாதிபதியும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட முதலாவது சனாதிபதியுமாவார். இவர் பெயரின் சுருக்கமான ஜே.ஆர். என பிரபலமாக அறியப்பட்டார். இவர் சனாதிபதிப் பதவியை ஏற்கும் முன் அரசில் பல பதவிகளை வகித்தார். இவர் ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தியதோடு அதன் தலைவராகவும் செயலாற்றினார்.
Remove ads
இளமைக் காலம்
இவர் இலங்கையின் சட்டத்துறையில் பிரபலமாக விளங்கிய குடும்பமொன்றில் பிறந்தார். இலங்கையின் தலைமை நீதிபதியாக இருந்த கௌரவ நீதியரசர் இயுஜீன் வில்பிரெட் ஜயவர்தனாவுக்கும், இலங்கையின் செல்வந்த வணிகர்களுள் ஒருவரின் மகளான அக்னசு டொன் பிலிப் விஜயவர்தனாவுக்கும் பிறந்த 11 பிள்ளைகளுள் இவரே முதலாமவர். இராணியின் வழக்கறிஞர் (QC) ஹெக்டர் வில்பிரெட் ஜயவர்தனா, மருத்துவர் ரொலி ஜயவர்தனா ஆகியோர் இவரது தம்பியர்கள். கர்னல் தியடோர் ஜயவர்தனா, நீதியரசர் வலன்டைன் ஜயவர்தனா ஆகியோர் இவரது தந்தையின் உடன்பிறந்தோர். பத்திரிகைத் துறையில் பிரபலமான டி. ஆர். விஜேவர்தனா இவரது மாமா. ஓர் ஆங்கிலேய செவிலித் தாயால் வளர்க்கப்பட்ட இவர்[1] கொழும்பில் உள்ள பிசப்கல்லூரியில் ஆரம்பக் கல்வியைக் கற்றார். பின் ராயல் கல்லூரியில் இடைநிலைக் கல்வியைப் பயின்றார். பின் ராயல் கல்லூரி சங்கத்தில் செயலாளராகப் பணிபுரிந்தார்.[2][3]
Remove ads
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads