ஜே. கே. எஸ் (இயக்குநர்)

தென்னிந்திய திரைப்பட இயக்குநர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஜே.கே.எஸ் என்பவர் ஒரு இந்திய திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் குறிப்பாக கன்னடம், தமிழ், தெலுங்கு மொழி படங்களில் பணியாற்றியுள்ளார். கன்னட படங்களில் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கிய பிறகு, ஜே.கே.எஸ் கரையோரம் (2015) என்ற பன்மொழித் திரைப்படத்தை உருவாக்கினார், அது இவரது இரண்டாவது திரைப்படமாக ஆனது.[1]

தொழில்

ஜெகதிஷ் குமார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் ஜே. கே. என்ற திரை பெயரில் சத்ரு என்ற படத்தின் வழியாக இயக்குநராக அறிமுகமானார். அப்படமானது சராசரி வெற்றியை ஈட்டியது. அடுத்து ஸ்ரீநகர் கிட்டி மற்றும் திஷா பாண்டே ஆகியோருடன் சுப்பிரமணி என்ற படத்தின் பணியைத் தொடங்கினார். அதே நேரத்தில் இவர் தனது பெயரை ஜே.கே.எஸ் என மாற்றிக்கொண்டார்.[2] கன்னடம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரு மும்மொழி படமாகத் தயாரிக்கப்பட்ட கரையோரம் (2015) என்ற திகில் பரபரப்பூட்டும் திரைப்படத்தை ஜே.கே.எஸ் இயக்கத் தொடங்கியதால் சுனில் சுப்பிரமணி டைரக்டர் படத்தின் தயாரிப்பு பணிகள் நிறுத்தப்பட்டன.[2][3] நிகேஷா படேல் மற்றும் இனியா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். கன்னட பதிப்பு 2015 நவம்பரில் கலவையான விமர்சனங்களுடன் வெளியானது. அதே நேரத்தில் தமிழ் பதிப்பு 2016 சனவரியில் வெளியிடப்பட்டது.

Remove ads

திரைப்படவியல்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, படம் ...

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads