ஜோஷியின் மினியேச்சர் ரயில் அருங்காட்சியகம்

மகாராட்டிரத்தில் உள்ள ஒரு அருங்காட்சியகம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஜோஷியின் மினியேச்சர் ரயில் அருங்காட்சியகம் என்பது இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனேவின் எரண்ட்வானே என்னும் பகுதியில் அமைந்துள்ள ஒரு மினியேச்சர் ரயில் அருங்காட்சியகமாகும். இந்த அருங்காட்சியகத்தில் பல்வேறு வகையான ரயில்களின் மாதிரிகள் காணப்படுகின்றன. இதை பௌசாஹேப் ஜோஷி தொடங்கி வைத்தார்.

விரைவான உண்மைகள் நிறுவப்பட்டது, அமைவிடம் ...
Remove ads

வரலாறு

இந்த அருங்காட்சியக அமைப்பதற்கான எண்ணம் பி.எஸ். ஜோஷியால் தோன்றியது. அதன் அடிப்படையில் இந்த அருங்காட்சியகம் அவரால் தொடங்கப்பட்டது, இந்த அருங்காட்சியகத்தைத் தொடங்கி வைத்த அவர் பௌசாஹேப் ஜோஷி என்று அழைக்கப்படுகின்றார்.[1] தனது குழந்தை பருவத்தில் தொடங்கி பொழுதுபோக்கின் மூலம் அவர் இவ்வாறான மாதிரிகளை சேகரித்து தயாரிக்கும் பணியைத் தொடங்கியுள்ளார். இருந்தாலும் இந்த கருத்தை மையமாகக் கொண்டு 1960 களில் அதில் உருவாக்கத் தொடங்கினார். அவர் ஆரம்ப காலங்களில் மொபைல் மாதிரிகளை உருவாக்க ஆரம்பித்தார். அவ்வாறு உருவாக்கியவற்றை அவர் பல்வேறு நகரங்களில் பொதுமக்கள் பார்வைக்காகக் காட்சிப்படுத்த ஆரம்பித்தார். இவ்வகையில் அவர் அமைத்து வந்த நிலையில், அவரது முதல் கண்காட்சி புனேவில் 1982 ஆம் ஆண்டில் கோகலே ஹாலில் நடத்தப் பெற்றது. 1984 ஆம் ஆண்டில் இதற்கான வடிவமைப்புத் திட்டம் மும்பையிலும் (பின்னர் பம்பாய்), அடுத்தபடியாக தொடர்ந்து 1986 ஆம் ஆண்டில் புனேவின் தஸ்தூர் உயர்நிலைப் பள்ளியிலும் காட்சிப்படுத்தப்பட்டது. மொபைல் மாதிரிகளை உருவாக்குவதில் அவர் பல அசௌகரியங்களை எதிர்கொள்ளும் சூழல் ஏற்பட்டது. அவ்வகையான அசௌகரியங்களைத் தவிர்க்கும் நோக்கத்தில் ஒரு நிரந்தர கண்காட்சியை அமைப்பதற்கு ஜோஷி முடிவு செய்தார். தற்போதைய அருங்காட்சியகத்தின் அமைப்பிற்கான திட்ட உருவாக்கம் அவரால் 1991 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து அருங்காட்சியகம் 1 ஏப்ரல் 1998 இல் திறந்து வைக்கப்பட்டது.[2] காலப்போக்கில் வடிவமைப்பில் பல மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. டிஜிட்டல் கட்டுப்பாடு உத்திகள் அறிமுகப்படுத்தப்பட்டன. மேலும் பலவகையான பல மாதிரிகளைக் கொண்டு அது விரிவாக்கம் செய்யப்பட்டது. அருங்காட்சியகத்தின் தற்போதைய உரிமையாளயாக டாக்டர் ரவி ஜோஷி செயல்பட்டு வருகிறார். அவர் பௌசாஹேப் ஜோஷி மகன் ஆவார்.

Remove ads

காட்சிப் பொருள்கள்

காட்சிக் கூடத்தில் பல வகையிலான மாடல் ரயில்கள் ஒரு மினியேச்சர் நகரம் எனப்படுகின்ற சிறிய அளவிலான நகரத்தில் இயங்கி வருகின்றன, மேலும் அவை ஒலி மற்றும் ஒளிக் காட்சியமைப்பினை பின் புலமாகக் கொண்ட நிகழ்ச்சியுடன் வழங்கப்பட்டு வருகின்றன. திட்ட வடிவமைப்பில் 65 சிக்னல்கள், தடுப்பு வேலிகள், விளக்குத் தூண்கள், மேம்பாலங்கள் போன்றவை அடங்கும். இவை அனைத்தையும் கையால் இயக்க முடியும். கணினி மூலமாகவும் இயக்கிக் கட்டுப்படுத்த முடியும். 2011 ஆம் ஆண்டில் 10 அங்குலம் முதல் 15 அங்குலம் வரை அளவினைக் கொண்ட ரயில்களோடு இயங்க ஆரம்பித்தது. அந்த ரயில் வகைகளில் நீராவி என்ஜின்கள், புல்லட் ரயில் மற்றும் ஒரு சிறிய ஸ்கை-ரயில் போன்றவையின் மாதிரிகளும் அடங்கும்.[3]

2003 ஆம் ஆண்டில், அருங்காட்சியகம் ஒரு மினியேச்சர் எனப்படுகின்ற சிறிய அளவிலான ரயில்வேயை உருவாக்க முனைந்தது. பல வகையான கருவிகளின் துணை கொண்டு ரயில் இயக்கங்களை கட்டுப்படுத்தும் வகையில் அவை அமைக்கப்பட்டன. இவ்வகையான திட்டம் இந்தியாவில் முதன்முதலில் அமைந்ததாகும். இந்த திட்டமானது இந்திய ரயில்வேக்கு பேட்டரிகள், உயர் அதிர்வெண் கொண்ட டிராக் சர்க்யூட் டேட்டா லாகர்கள், டிஜிட்டல் அச்சு கவுண்டர்கள் மற்றும் எலக்ட்ரானிக் இன்டர்லாக் முறை போன்றவற்றைத் தயாரித்து வழங்கி வருகின்ற எச்.பி.எல்நைஃப் நிறுவனத்தின் மூலமாக செயல்படுத்தப்பட்டது. இந்த மாதிரியான வடிவமைப்பில் இந்தியாவின் முதல் இடத்தைப் பெற்றுள்ள இது டிஜிட்டல் முறை மூலமாக ரயில்களின் இயக்கங்களை கட்டுப்படுத்தப்படுத்தி, செயல்படுத்துகிறது.[4]

2003 ஆம் ஆண்டு முதல், இந்த அருங்காட்சியகம் ஃப்ளீஷ்மேன், ரோகோ மற்றும் ஹார்ன்பி ரயில்வே போன்ற சர்வதேச நிறுவனங்களுக்கான இந்தியா விநியோகஸ்தராக செயல்படுகிறது. அவை ரயில் மாதிரிகளை உருவாக்குகின்றன. "ட்ரெய்ன்ஸ்" எனப்படுகின்ற அருங்காட்சியகத்தின் பொழுதுபோக்கு மையமானது ரயில் மாதிரிகளைப் பிரபலப்படுத்தவும், அதைப் பற்றிய அடிப்படை அறிவை வழங்கவும் முயன்று வருவதாக ரவி ஜோஷி கூறுகிறார். தற்போது பார்வையாளர் கட்டணமாக தனிநபருக்காக ஒரு நபருக்கு ரூ .90 வசூலிக்கப்படுகிறது. 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை.[5] இந்த அருங்காட்சியகம் சொந்தமாக சொந்த உற்பத்திப் பிரிவினைக் கொண்டுள்ளது. இந்த அருங்காட்சியகம் தளத்தில் மினியேச்சர் எனப்படுகின்ற சிறிய அளவிலான ரயில்வே பொருள்களை விற்கிறது சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலியா மற்றும் இந்திய ரயில்வேக்கு விற்பனையும் செய்து வருகிறது.[6] 2007 ஆம் ஆண்டில் இது ஐரோப்பாவின் மிக உயர்ந்த ரயில்வேயான ஜங்ஃப்ராவ் ரயில்வே நிறுவனத்திற்காக ஒரு மாதிரியைத் தயாரித்தது, மேலும் 2000 எண்ணிக்கைக்கான வழங்காணைகளைப் பெற்றுள்ளது. அவை ரயில்வே நிலையங்களில் விற்கப்பட உள்ளன. ,இந்த வகையான மாதிரிகள் ஊசி மருந்து செலுத்து வடிவமைப்பு என்னும் முறையில் செய்யப்படுகின்றன.[7]

புனே முனிசிபல் கார்ப்பரேஷனின் ஒரு நாள் நகர சுற்றுலாவில் இந்த அருங்காட்சியகத்தையும் காணும் வசதி உள்ளது.[3] அருங்காட்சியகம் அமைந்துள்ள சாலைக்கு பாவ் ஜோஷி என்று பெயரிடப்பட்டுள்ளது.[8]

Remove ads

மேலும் காண்க

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads