டக்ளஸ் தேவானந்தா

From Wikipedia, the free encyclopedia

டக்ளஸ் தேவானந்தா
Remove ads

டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda, நவம்பர் 10, 1957; யாழ்ப்பாணம், இலங்கை) ஒரு இலங்கை அரசியல்வாதி ஆவார். இவர் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஆவார். இவர் 2000 -2001 மற்றும் 2004 - 2005 காலப்பகுதியில் இலங்கை இந்துசமய, கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் அமைச்சராகக் கடமையாற்றினார். ஆரம்பத்தில் ஈழப் போராளியாக இருந்து பின்னர் ஜனநாயக அரசியலுக்கு மாறியவர். இவரின் அரசியல் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஏக பிரதிநிதித்துவ கொள்கைக்கு நேரடி சவாலாக இருப்பதோடு, அக்கொள்கையையும் மறுதலிக்கின்றது. சுதந்திர இலங்கையின் 10வது நாடாளுமன்றம் (1994), சுதந்திர இலங்கையின் 11வது நாடாளுமன்றம் (2000), சுதந்திர இலங்கையின் 12வது நாடாளுமன்றம் (2001), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004),சுதந்திர இலங்கையின் 14வது நாடாளுமன்றம் (2010) இலங்கையின் 15வது நாடாளுமன்றம் (2015) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார். [1][2][3][4]

விரைவான உண்மைகள் டக்ளஸ் தேவானந்தாDouglas Devanandaநா.உ, மீன்பிடித்துறை அமைச்சர் ...
Remove ads

மேற்கோள்கள்

இவற்றையும் பார்க்கவும்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads