டாங் மாவட்டம்
குசராத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
டாங் மாவட்டம் அல்லது தாங் மாவட்டம் (Dang District) (ⓘ), இந்தியாவின், குஜராத் மாநிலத்தின் 33 மாவட்டங்களில் ஒன்று.[1] இதன் தலைமையகம் ஆக்வா நகராகும். மாவட்ட பரப்பளவு 1764 சதுர கி. மீ., மக்கள் தொகை 2,26,769. [2]
இம்மாவட்டம் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய மாவட்டமாக இந்திய அரசின் திட்டக்குழு அறிவித்துள்ளது.[3] . சபுத்திரா மற்றும் வகாய் முக்கிய நகரங்கள்.
வருவாய் வட்டங்கள்
- வகாய்
- ஆக்வா
- சுபிர்
மக்கள் வகைப்பாடு
2011ஆம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, இம்மாவட்ட மக்கள் தொகை 2,26,769. மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கி. மீ., க்கு 129 பேர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1007 பெண்கள். எழத்தறிவு விகிதம் 76.8%.[2]
பொருளாதாரம்
வறுமை மிக்க இந்திய மாவட்டங்களில் டாங் மாவட்டம் 250 இடத்தில் உள்ளது. பொருளாதாரத்தை மேம்படுத்தி, வறுமையை ஒழிக்க, குசராத் அரசின் நிதியுதவி பெறும் ஆறு மாவட்டங்களில் ஒன்று.[4]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads