டாய்ட்ச் கருத்தியம்

From Wikipedia, the free encyclopedia

டாய்ட்ச் கருத்தியம்
Remove ads

செருமனியக் கருத்தியல் அல்லது ஜெர்மன் கருத்தியம் (ஆங்கிலம்: German idealism, டாய்ட்ச்: Deutsche Idealismus) என்பது மேற்குலக மெய்யியல் வரலாற்றில் 18 ஆவது நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் டாய்ட்ச் மெய்யியலாளர்கள் தோற்றுவித்து வளர்த்தெடுத்த ஒரு முக்கியமான மெய்யியல் இயக்கம். 1780களிலும் 1790களிலும் டாய்ட்ச் நாட்டைச் சேர்ந்த இம்மானுவேல் கண்ட் தொடங்கிவைத்த மெய்யியல் கருத்துக்களின் விளைவாக இவ் இயக்கம் உருவானது. 18 ஆம் நூற்றாண்டில் மேற்குலகில் எழுந்த உணர்வெழுச்சி இயக்கத்துடனும் (ரோமான்ட்டிசிசம்) அறிவொளிக் கால (Enlightenment) இயக்கத்துடனும் இக் கருத்தியம் நெருங்கிய தொடர்புடையது. டாய்ட்ச் கருத்தியத்தின் பரவலாக அறியப்பட்ட முன்னணி மெய்யியலாளர்கள்: இம்மானுவேல் கண்ட், யோஃகான் ஃவிக்டெ பிரீடரிக் ஷெல்லிங், ஹெகல். என்றாலும் பிரீடரிக் ஹைன்ரிக் ஜக்கோபி (Friedrich Heinrich Jacobi), கார்ல் லியோனார்டு ரைன்ஹோல்டு (Karl Leonhard Reinhold), பிரீடரிக் ஷ்லையர்மாஃகர் (Friedrich Schleiermacher ) முதலானோர் டாய்ட்ச் கருத்தியத்திற்கு பெரும் பங்களித்தவர்களாவர்.[1][2][3]

Thumb
Philosophers of German idealism. இம்மானுவேல் கண்ட் (upper left), யோஃகான் ஃவிஃக்டெ (upper right), பிரீடரிக் ஷெல்லிங் (lower left), ஹெகல் (lower right)
Remove ads

கருத்தியம் என்பதன் பொருள்

கருத்தியம் என்னும் சொல் மேற்குலக மெய்யியலில் தனியான ஒரு சிறப்பு பொருளில் ஆளப்படுகின்றது. ஆங்கிலத்தில் ஐடியலிசம் (Idealism) என்றும், டாய்ட்ச் மொழியில் (ஜெர்மன் மொழியில்) இடேயாலிஸ்முஸ் (Idealismus) என்றும் கூறப்படும் சொல் அம்மொழிகளில் அறியப்படும் பொருளாகிய "செம்மையான", "சிறந்த" "குற்றமில்லா" என்னும் பொருட்களில் பொதுவாக ஆளப்படுவது பலரும் அறிவது. ஆனால் ஐடியலிசம் என்னும் சொல் மெய்யியலில் அப்பொருட்களில் ஆளப்படவில்லை. இடேயாலிஸ்முஸ் அல்லது ஐடியலிசம் என்னும் சொற்களுக்கு இணையாக தமிழில் கருத்தியம் என்னும் சொல் இச்சூழலில் வழங்குகின்றது. இதன் மெய்யியல் பொருள் என்னவென்றால், ஒரு பொருள் தான் பெற்றிருக்கும் பொருட்பண்புகள் எதுவாக இருப்பினும், அப்பொருள் அதனை உணர்வோர்கள் தம் உள்ளத்தில் எவ்விதமாக என்னவாக (கருத்தாக) உணர்கிறார்கள் என்பதாகும். எனவே உணர்வோர் உள்ளத்தின் "அறிவு" கடந்து (மீறி) "தனியாக" அப்பொருள் "தன்னுள்ளே" எப்பண்புகள் கொண்டுள்ளன என்னும் எண்ணமே இந்த கருத்தியக் கொள்கைக்கு பொருந்தாத ஒன்று.

Remove ads

மேலும் படிக்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads