இடபம் (விண்மீன் குழாம்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இடபம் (ஆங்கிலம்:Taurus) ரிஷப ராசிக்குரிய விண்மீன் கூட்டம் ஆகும். இது மேஷ ராசிக் குரிய ஏரெசு விண்மீன் கூட்டத்திற்கும், மிதுன ராசிக்குரிய ஜெமினி விண்மீன் கூட்டத்திற்கும் இடையில் உள்ளது.[2] நம் சூரியன் இக் கூட்டத்தை மே 14 முதல் ஜூன் 21 வரையில் கடந்து செல்கிறது.[3] கிரேக்க புராணத்தில் சியுசு என்ற கடவுள் பொனிசியாவின் இளவரசி ஈரோப்பாவை பாதுகாப்பாகக் கடத்திச் செல்ல காளை மாடாக உருமாறி அவளைத் தன் முதுகில் சுமந்து கொண்டு ஆற்றை நீந்திக் கடக்கிறார்.[4] ஆற்றில் கரை புரண்டு ஓடும் வெள்ளத்தில் நீர் மட்டத்திக்கு மேலாகக் காளை மாட்டின் மேற்பகுதி மட்டுமே தெரிகிறது. புராணத்தின் இந்தக் கட்டத்தைக் குறிப்பிடுவதாக இந்த வட்டார விண்மீன் கூட்டம் காளை மாடாகக் கற்பனை செய்யப்பட்டுள்ளது. இக் கூட்டத்தில் 125 விண்மீன்களுடன். பிளியாடெஸ், ஹையாடெஸ் என்ற இரு தனிக் கொத்து விண்மீன் கூட்டங்களையும் இனமறிந்துள்ளனர்.[5][6] இதை ஒட்டியே சைக்னஸ் (cygnus ) எனப்படும் நண்டு வடிவ நெபுலா உள்ளது.[7][8]

Remove ads
மேற்கோள்களும் குறிப்புகளும்
உசாத்துணை நூல்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads