டார்வின் சித்தி விநாயகர் கோயில்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

சித்தி விநாயகர் கோயில் அவுஸ்திரேலியாவின் வட பிராந்தியத்தின் (Northern Territory) தலைநகரான டார்வினில் இருந்து 15கிமீ வடக்கே Malak என்னும் இடத்தில் அமைந்துள்ளது.

வரலாறு

டார்வினில் வாழும் சைவ மக்கள் தமக்கென ஒரு கோயிலை அமைப்பதற்காக வட பிராந்திய அரசு Malak என்னும் இடத்திலுள்ள நிலத்தை வழங்கியது. ஆரம்பத்தில் பஜனை மண்டபம் ஒன்று கட்டப்பட்டு 1992 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி தொடக்கம் அதில் பஜனை ஆரம்பிக்கப்பட்டது. அன்று தொடக்கம் விசேட தினங்கள் கொண்டாடப்பட்டு வந்தது. ஓர் ஆண்டுக்குள் இந்திய ஸ்தபதிகளினால் அதனுள் கோயில் அமைக்கப்படடது. கோயிலின் மூலஸ்தான மூர்த்தியாக சித்தி விநாயகர் தாபிக்கப்பட்டு 1993 ஆம் ஆண்டு ஐப்பசி மாதத்தில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

Remove ads

அமைப்பு

மண்டபத்தினுள் மூஷிகம், பலிபீடம் ஆகியனவும், தெட்சணாமூர்த்தி, சிவலிங்கம், விஷ்ணு, பிரம்மா, சிவகாமி சமேதரராக நடராஜர், வள்ளி தெய்வானை சமேதரராக முருகன், வைரவர் ஆகிய வடிவங்களும் தாபிக்கப்பட்டுள்ளன. இந்தக் கோயிலில் விசேட தினங்கள் யாவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன.

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads