டிசிப்ரோசியம்(III) குளோரைடு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
டிசிப்ரோசியம்(III) குளோரைடு (Dysprosium(III) chloride) என்பது DyCl3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். டிசிப்ரோசியமும் குளோரினும் சேர்ந்து உருவாகும் இச்சேர்மத்தை டிசிப்ரோசியம் டிரைகுளோரைடு என்றும் அழைக்கிறார்கள். வெண்மையும் மஞ்சளும் கலந்த நிறத்தில் காணப்படும் இச்சேர்மம் ஈரக்காற்றில் உள்ள நீரை எளிதாக ஈர்த்துக் கொண்டு அறுநீரேற்றாக (DyCl3.6H2O) உருவாகிறது. இலேசாக வெப்பப்படுத்தும் போது பகுதியாக [1] டிசிப்ரொசியம் ஆக்சி குளோரைடாக (DyOCl) நீராற்பகுப்பு அடைகிறது.
Remove ads
தயாரிப்பு
Dy2O3 அல்லது நீரேற்ற குளோரைடு அல்லது ஆக்சி குளோரைடு அல்லது DyCl3•6H2O. இவற்றிலொன்றை தொடக்கப் பொருளாகக் கொண்ட அமோனியம் குளோரைடு பாதையில் பெரும்பாலும் டிசிப்ரோசியம்(III) குளோரைடு தயாரிக்கப்படுகிறது [2][3] or DyCl3•6H2O.[4]. இத்தயாரிப்பு முறைகள் யாவும் (NH4)2[DyCl5] அணைவுச் சேர்மத்தை உருவாக்குகின்றன.
- 10 NH4Cl + Dy2O3 → 2 (NH4)2[DyCl5] + 6 NH3 + 3 H2O
- DyCl3•6H2O + 2 NH4Cl → (NH4)2[DyCl5] + 6 H2O
இப்பென்டாகுளோரைடு வெப்பத்தால் பின்வரும் சமன்பாட்டிலுள்ளவாறு சிதைவடைகிறது.
- (NH4)2[DyCl5] → 2 NH4Cl + DyCl3
வெப்பச்சிதைவு வினை இடைநிலை வேதிப்பொருளான (NH4)[Dy2Cl7] வழியாக நிகழ்கிறது. Dy2O3 வை நீர்த்த ஐதரோ குளோரிக் அமிலம் சேர்த்து சூடாக்கும் போது (DyCl3•6H2O) உற்பத்தி செய்யப்படுகிறது. சூடாக்குவதால் இவ்வுப்பு நீரற்றதைக் கொடுப்பதற்குப் பதிலாக ஆக்சிகுளோரைடைத் தருகிறது.
டிசிப்ரோசியம்(III) குளோரைடு ஒரு மிதமான வலிமை கொண்ட இலூயிக் அமிலமாகும். வன்மென் அமிலக்காரக் கோட்பாட்டு அடிப்படையில் இது வன்னமிலமாகத் தரப்படுத்தப்படுகிறது. டிசிப்ரோசியம் குளோரைடின் நீர்த்தக் கரைசல்களை மற்ற டிசிப்ரோசியம்(III) சேர்மங்கள் தயாரிக்கப் பயன்படுத்த முடியும். உதாரணம் டிசிப்ரோசியம் புளோரைடு:
- DyCl3 + 3 NaF → DyF3 + 3 NaCl
Remove ads
பயன்கள்
டிசிப்ரோசியம் குளோரைடு பிற டிசிப்ரோசியம் உப்புகள் தயாரிப்பில் தொடக்கப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இயுடெக்டிக் LiCl-KCl இல் உள்ள DyCl3 இன் உருகிய கலவை மின்னாற் பகுப்பின் போது டிசிப்ரோசியம் உலோகத்தைக் கொடுக்கிறது. தங்குதன் எதிர்மின் வாயில் Dy2+ வழியாக ஒடுக்க வினை நிகழ்கிறது [5].
பாதுகாப்பு
டிசிப்ரோசியம் சேர்மங்கள் யாவும் மிதமான நச்சுத்தன்மை உடையன என நம்பப்படுகிறது. இருப்பினும் இதன் நச்சுத்தன்மை தொடர்பான விரிவான ஆய்வுகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads