டிரைவர்பக்சு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
டிரைவர்பக்ஸ்.நெட் ஓர் திறந்த மூல நிரற் திட்டம் ஆகும். இத்திட்டத்தின் இலக்காக எல்லாக் கணினிகளுக்கும் ஓர் சீரான விண்டோஸ் நிறுவற் சீடி/டீவிடி உருவாக்கி டிவைஸ் டிரைவர் சீடி இன்றி எந்தவொரு வன்பொருளிலும் நிறுவைலை மேற்கொள்ள உதவுவதாகும். அத்துடன் ஒவ்வொரு மதர்போட்டுக்கும் ஒவ்வொரு சீடி என்றவாறு அல்லாமல் ஒவ்வொரு வகுப்புக்கும் எடுத்துக்காட்டாக வலையமைப்பு வன்பொருளுக்கு ஒருதொகுதி டிரைவர்கள் என்றவாறு வகுப்பு ரீதியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
தற்பொழுது டிரைவர்பக்ஸ் கீழ்வரும் தொகுதிகளாகக் கிடைக்கின்றது.
Remove ads
- சிப்செட் (chipset)
- மையச்செயலி (சீபியு)
- கிராபிக்ஸ்
- வலையமைப்பு
- கம்பியற்ற வலையமைப்பு (வைபை)
- சாட்டா மற்றும் ஏனைய சேமிப்பகங்களுக்கானது (இதன் ஒரு யுக்தியாக இயங்குதள நிறுவலை ஆரம்பிக்கும் பொழுது நெகிழ்வட்டு அதாவது பிளாப்பி மூலமாக மாஸ்ஸ்டோரேஞ் - massstorage டிரைவர்களை காட்டவேண்டிய அவசியம் இல்லை)
இவை தன்னார்வலர்களால் சமர்பிக்கப்படுபவை ஆகும். இவற்றில் சில வழுக்களைக் கொண்டுள்ளன. மூன்றாம் தரப்பு டிவைஸ் டிரைவர்கள் நேரடியாக ஆதரவளிக்கப்படுபவை அல்ல. இவற்றுள்
- மானிட்டர்கள்
- ஸ்மாட்காட் றீடர்
- ஸ்கானர்
- அச்சியந்திரம் (ஹூயுவ்லெட் பக்காட், கனொன்)
என்பன குறிப்பிடத்தக்கவை.
டிரைவர் பக்ஸ் பேஸ் என்னும் மென்பொருளூடாகவே பதிவிறக்கப்பட்ட மென்பொருட்கள் விண்டோஸ் நிறுவற் சீடி/டீவிடி உடன் ஒன்றிணைக்கப்படுகின்றன. இது விண்டோஸ் எண்டி 5.1 கேர்னலுடன் ஒத்திசைவானது ஆதலினால் இது விண்டோஸ் 2000, எக்ஸ்பி, சேவர் 2003 ஆகிய இயங்குதளங்களை ஆதரிக்கின்றது. விண்டோஸ் விஸ்டா இயங்குதளத்திற்கான ஆதரவு திட்டமிடப்பட்டுள்ள பொழுதும் இன்னமும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
Remove ads
வரலாறு
ஆரம்பத்தில் விம் லேர்சினால் இத்திட்டமானது ஒரு சீரான எக்ஸ்பி சீடி மூலம் எல்லா வன்பொருட்களுக்கும் நிறுவலை நிறுவவேண்டும் என்னும் எண்னக்கருவுடனேயே இத்திட்டமானது ஆரம்பிக்கப்பட்டது.
இவற்றையும் பார்க்க
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads