டி. எஸ். சந்தானம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

டி. எஸ். சந்தானம் (T. S. Santhanam, நவம்பர் 8, 1912-ஏப்ரல் 15, 2005) தொழில் துறையிலும், நிதிநிறுவனத் துறையிலும் சிறந்து விளங்கியவர்களில் குறிப்பிடத்தக்கவராவார். இவரின் தந்தை டிவிஎஸ் குழுமங்களின் நிறுவனரான டி. வி. சுந்தரம் அய்யங்கார். தாயார் லட்சுமி அம்மாள். இவர் மதுரையில் கல்வி கற்றார்.

தொழில்

1930 இல் இருந்து தந்தையுடன் சேர்ந்து தொழிலில் ஈடுபட்டு வந்தார். சாலைப் போக்குவரத்து, ஆட்டோ மொபைல் உபகரணங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை, வங்கித்துறை, நிதித்துறை, காப்பீட்டுத் துறையில் மிகுந்த பட்டறிவு மிக்கவராக இருந்தார். பல வெளிநாடுகளுக்குச் சென்று வந்து தான் கற்ற புதிய தொழில் நுட்பங்களைத் தமது நிறுவனங்களில் புகுத்தியவர். பிரேக்ஸ் இந்தியா, வீல்ஸ் இந்தியா, இந்தியா மோட்டார்ஸ் அண்ட் அக்சசரீஸ் லிமிடெட், சுந்தரம் பைனான்ஸ் ஆகிய நிறுவனங்களின் தலைவராக இருந்தார். தயாரிப்பில் தரத்தைக் கடைபிடித்ததால் இவர் நிறுவனங்களின் தயாரிப்புகளுக்குச் சந்தையில் நல்ல மதிப்பு இருந்தது. இதனால் நிறுவனம் மேலும் வளர்ச்சி கண்டது.

Remove ads

விருது

மோட்டார் இந்தியா நிறுவனம் இவருக்கு 1998 ஆம் ஆண்டு ஏப்ரலில் ஆட்டொ மென் இந்தியா விருது வழங்கிக் கௌரவித்தது.[1]

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads